Connect with us

Cricket

T20 WC 2024: 10 ஆண்டுகளுக்குப் பின் ஃபைனல்ஸ்… இங்கிலாந்தை வஞ்சம் தீர்த்த இந்தியா!

Published

on

டி20 உலகக்கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2022 டி20 உலகக்கோப்பை அரையிறுதி தோல்விக்கு இந்திய அணி பழிதீர்த்துக் கொண்டது.

கயானாவில் நடந்த இந்தப் போட்டி மழை காரணமாக 50 நிமிடங்களுக்கு மேல் தாமதமாகவே தொடங்கியது. இரு அணிகளுமே ஃபீல்ட் செய்ய நினைத்த நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்து இந்திய அணியை பேட் செய்ய பணித்தது. பவர்பிளேவுக்குள்ளேயே விராட் கோலி, ரிஷப் பண்ட் விக்கெட்டுகளை இழந்தாலும், கேப்டன் ரோஹித் ஷர்மாவும் சூர்யகுமார் யாதவும் இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

ரோஹித் ஷர்மா, 57 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 47 ரன்களும் எடுத்து 14 மற்றுய்ம் 16-வது ஓவர்களில் ஆட்டமிழக்க இந்திய அணியின் ரன் வேகம் குறைந்தது. கடைசி கட்டத்தில் ஹர்திக், ஜடேஜா அதிரடியால் இந்திய அணி 171 ரன்கள் என்ற சவாலான ஸ்கோரை எட்டியது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

172 ரன்கள் இலக்கோடு ஆரம்பமே அதிரடியாய் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு பவர்பிளேவில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா பதிலடி கொடுத்தது. பட்லர், பாரிஸ்டோவ் விக்கெட்டுகளை அக்சர் படேலும் பில் சால்ட் விக்கெட்டை பும்ராவும் வீழ்த்தினர். அதன்பின், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து 16.4 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

3 விக்கெட்டுகளை வீழ்த்திய அக்சர் படேல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இதன்மூலம் 10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெற்றுள்ளது. நாளை நடைக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா, ஃபைனல்ஸுக்கு முதல்முறையாகத் தகுதிபெற்றிருக்கும் தென்னாபிரிக்க அணியை எதிர்க்கொள்கிறது.

இதையும் படிங்க: 7ம் வகுப்பு பாடத்திட்டத்தில் தமன்னா வாழ்க்கை குறிப்பு… மாநிலம் முழுவதும் கிளம்பும் எதிர்ப்பு…

google news