Connect with us

Cricket

AFGvsNZ டெஸ்ட்: இந்தியாவிலேயே முதல்முறை.. மழை தான் எல்லாத்துக்கும் காரணம்..!

Published

on

ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாட ஏதுவான சூழல் இல்லாதது மற்றும் பல்வேறு காரணங்களால் அந்த அணி இந்தியாவை தனது ஹோம் கிரவுண்ட் ஆக கருதி மற்ற அணிகளுடன் சர்வதேச போட்டிகளை விளையாடி வருகிறது. அந்த வகையில், ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 09 ஆம் தேதி துவங்க இருந்தது.

இரு அணிகள் இடையே ஒற்றை டெஸ்ட் போட்டி நடைபெற இருந்த நிலையில், போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை மற்றும் களம் விளையாடுவதற்கு ஏதுவாக இல்லை என்ற காரணங்களால் டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. கிரேட்டர் நொய்டாவில் டெஸ்ட் போட்டி நடைபெற இருந்தது. எனினும், அங்கு தொடர் மழை மற்றும் மைதானத்தில் மழைநீரை வெளியேற்றும் வடிகால் வசதி மற்றும் உலர்த்துவதற்கான உபகரணங்கள் இல்லாதது போட்டியை தாமதப்படுத்திக் கொண்டே வந்தது.

இடையில், போட்டி துவங்கும் நாளில் இருந்து தொடர்ச்சியாக மழை குறுக்கிட்டது, மழையால் மைதானத்தில் தேங்கிய நீரை வெளியேற்றுவது, களத்தை உலர்த்துவது போன்ற பணிகளை விரைந்து முடிக்க முடியாமல் போனது போன்ற காரணங்களால் டெஸ்ட் போட்டியின் முதல் நான்கு நாள் போட்டிகளும் தொடர்ச்சியாக ரத்து செய்யப்பட்டு வந்தன. இதே நிலை, இன்றும் நிலவியது. இதனால் போட்டியை கடைசி நாளில் கூட நடத்த முடியாமல் போனது. மேலும், டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளும் அதிகம் எதிர்பார்த்த டெஸ்ட் போட்டி இந்தியாவில் நடைபெற இருந்தது. இந்த நிலையில், பல்வேறு காரணங்களால் போட்டியின் ஐந்து நாட்களில் டாஸ் கூட போட முடியாத அளவுக்கு இயற்கையும் கள சூழலும் தன் பங்கு ஆட்டத்தை வெளிப்படுத்த, போட்டி நடக்காததற்கு முழு பழியும் இந்தியா மீது திரும்பியுள்ளது. முதல் நாள் போட்டி தடைப்பட்டதுமே, அதிருப்தி தெரிவித்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இனி இங்கு வரவே கூடாது என்று தெரிவித்தது.

தற்போது டாஸ் கூட போடப்படாமல் டெஸ்ட் போட்டி கைவிடப்பட்டு இருப்பது, இந்தியாவிலேயே முதல்முறை ஆகும். மேலும் 91 ஆண்டுகளில் முதல் முறையாக டெஸ்ட் போட்டி ஒன்றில் ஒருபந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டு இருப்பதும் இதுவே முதல் முறை ஆகும். இந்தியா 1933 ஆம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் போட்டியை நடத்தியது. அன்று துவங்கி இதுவரை ஒருபோட்டி கூட இப்படி கைவிடப்பட்டது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் ஆசியாவில் இதேபோன்று ஒரு போட்டி ஒருபந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டு இருக்கிறது. 1998 ஆம் ஆண்டு ஃபைசலாபாத்தில் பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இடையிலான போட்டி இதே போன்று கைவிடப்பட்டது. இதுதவிர உலகளவில் ஒருபந்து கூட வீசப்படாமல் இதுவரை ஏழு டெஸ்ட் போட்டி கைவிடப்பட்டுள்ளன.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *