india
ஆதார் கார்டு அலர்டு…ஆன்-லைன் மூலம் புதுப்பிக்கும் வழிமுறைகள்…
தனி மனித அடையாளமாக விளங்குவது ஆதார் அட்டைகள் இந்தியாவில். வங்கிகளில் கணக்கு துவங்குவதிலிருந்து அனைத்திற்குமே இந்த ஆதார் அட்டைகள் அடையாளமாகி விட்டது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் விநியோகிக்கப்பட்ட ஆதார் அட்டைகளை இது வரை ஒரு முறை கூட புதிப்பிக்காமல் இருப்பவர்கள் தங்களது ஆதார் அட்டையை இலவசமாக புதிப்பித்துக் கொள்வதற்கான கால அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் விநியோகிக்கப்பட்ட ஆதார் அட்டைகளை இது வரை ஒரு முறை கூட புதுப்பிக்காமல் இருப்பவர்கள் தங்களது அடையாள மற்றும் இருப்பிட சான்றுகளைக் கொண்டு அவற்றை புதுப்பித்துக் கொள்ளலாம் என ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.
செப்டம்பர் மாதமான இந்த மாதம் பதினான்காம் தேதிக்குள் ஆதார் அட்டையை புதிப்பிப்பவர்கள் இலவசமாக புதுப்பித்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிக்குப் பிறகு ஆதார் அட்டையை புதுப்பிக்க செல்பவர்கள் ஐம்பது ரூபாயை புதுப்பித்தல் கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.
இணைய தளத்தில் ஆதார் அட்டைகளை புதுப்பித்திக்கொள்ள உதவும் இணையதள முகவரியும் அறிவிக்கப்பட்டுள்ளது. myaadhaar.uidai.gov.in. இந்த இணைய தள முகவரியில் இந்த புதுப்பித்தல்களை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆதார் சேவை மையங்களுக்கு சென்று மட்டுமே புதுப்பிக்க முடியும் என்பது மாறுகிறது. ஆதார் அட்டையில் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு வரும் ஓ.டி.பியை கொண்டு ஆதார் அட்டை புதுப்பித்தலை எளிதாக்கலாம் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.
சரியான தகவல்கள் கொடுக்கப்பட்டு அவற்றை பரிசோதித்து தங்களது புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்ற செய்தியையும் சொல்லியிருக்கிறது ஆதார் ஆணையம்.
இந்த விதமான புதுப்பித்தலை இலவசமாக செய்துகொள்ள கடைசி நாளாக இம்மாதம் பதினாகாம் தேதியே கடைசியாகும். பயனாளிகள் இந்த அறிவிப்பை சரிவர பயன்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.