Connect with us

india

ஆதார் ஆவணம் அல்ல!…உயர் நீதிமன்ற தீர்ப்பை ரிஜக்ட் செய்த உச்ச நீதிமன்றம்…

Published

on

Accident

சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கும் வழக்குகளில் வயதை தீர்மானிக்கும்  ஆவணமாக ஆதாரை ஏற்றுக் கொள்ள முடியாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது. ஆதாரை ஆவணமாக ஏற்றுக் கொள்ளலாம் என பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றங்கள் வழங்கியிருந்த உத்தரவினை ரத்து செய்து இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.

சாலை விபத்துகளில் உயிரிழப்போருக்கு வழங்கப்படும் நிவாரணத்திற்காக சமர்ப்பிக்கப் பட வேண்டிய ஆதாரங்கள் குறித்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல், உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் வயதை தீர்மானிக்க ஆதார் அட்டையை ஏற்றுக் கொண்ட பஞ்சாப், ஹரியாணா உயர்நீதி மன்ற உத்தரவினை ரத்து செய்து தீர்ப்பினை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு.

கடந்த 2015ம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்த நபருக்கு இழப்பீடாக ரூ.19.35 லட்சத்தை வழங்க உத்தரவிட்டிருந்தது எம்ஏசிடி.

Supreme Court

Supreme Court

உயிரழந்தவரின் வயதைத் தவறாக கணக்கிட்டு எம்ஏசிடி இந்த உத்தரவு பிறப்பிக்கட்டதாக கூறி பஞ்சாப் மற்றும் ஹிரியாணா நீதிமன்றங்கள் நிவாரணத் தொகையை 9.22 லட்சமாக குறைத்து தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து உயிரிழந்தவரின் குடும்பத்தினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம். ஆதார் அட்டையின் படி உயிரிழந்தவரின் வயது 47 எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் இறந்தவரின் வயது 45 என சொல்லியுள்ளது, அதையே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. இதனால் விபத்தில் உயிரிழந்தவரின் வயதை தீர்மானிக்கும் ஆவணமாக ஆதாரை ஏற்றுக் கொள்ளலாம் என்ற முந்தைய உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

google news