Finance
ஆந்திராவிற்கு அடுத்து பிற மாநிலங்களை பின்னுக்குத் தள்ளிய பீகார்?…அதிக சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதாக வல்லுனர்கள் கருத்து…
பிகார் மாநிலத்தின் வளர்ச்சிக்காக அதிகமான நிதியும், திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கருத்துக்கள் வெளியாகியுள்ளது இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டிற்கு பிறகு. இதே போல ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல சிறப்பு அறிவிப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பரவலாக பேச்சுக்கள் எழத்துவங்கியுள்ளது.
நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பாஜக தனிப்பெரும்பான்மையை பெறாமல் தனது கூட்டணி கட்சிகளின் முறையான ஆதரவு வழங்கினால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும் அமைக்க முடியும் என்ற நிலை இருந்தது. கூட்டணி தர்மத்தின் படி ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு, பிகாரின் நிதிஷ்குமார் ஆகியோரின் ஆதரவோடு மீண்டும் ஆட்சியமைத்து பாஜக.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்திற்கு அதிகமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக கருத்துக்கள் வரத்துவங்கியுள்ள நிலையில் ஆந்திராவை போலவே பிகாருக்கும் அதிக பலன்கள் கிடைத்துள்ளதாக விமர்சனங்கள் வரத்துவங்கியுள்ளது.
பிகாரில் இருபத்தி ஆராயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய விமான நிலையங்கள், புதிய மருத்திவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிகார் வெள்ளத் தடுப்பு மட்டும் நிவாரணப் பணிகளுக்காக பதினோராயிரத்து ஐனூறு ரூபாய் ஒதுக்கப்படுள்ளது.
இரண்டாயிரத்து நானூறு வாட் மின் உற்பத்தி செய்யும் விதமான ஆலைகளை அமைக்க பிகாருக்கு இருபத்தி ஓராயிரத்து நானூறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல பிகாரில் உள்ள் ஆன்மீக தளங்களான விஷ்ணு பாதம், மகா போதி, ராஜ்கிர்ஜைன மேம்படுத்தப்படும் என உறுதியும் அளிக்கப்பட்டுள்ளது இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில்.