வேலை பார்த்தா இந்த நிறுவனத்தில் தா பாக்கணும்… ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு அம்பானி வழங்கிய சிறப்பு பரிசு…!

0
128

ரிலையன்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பை அம்பானி வழங்கி இருக்கின்றார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியின் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு இன்று மும்பையில் கோலாகலமாக திருமணம் நடைபெற இருக்கின்றது. ஆனந்த் அம்பானி ராதிகா மெர்சண்ட்டை திருமணம் செய்ய இருக்கின்றார். இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்கு பல பிரபலங்கள் மும்பைக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதனால் மும்பையே களைகட்டி இருக்கின்றது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் ஊழியர்களின் கலந்து கொண்டிருக்கிறார்கள். திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டு ஆடம்பர பரிசுகளுடன் திருமணம் நடைபெற்று வருகின்றது.

மேலும் ரிலையன்ஸ் ஊழியர்கள் விழாவை கொண்டாட ஒரு பரிசு பெட்டி தொகுப்பையும் வழங்கி இருக்கிறார்கள். திருமணத்திற்கு முன்னதாக ஊழியர்கள் பெற்ற இந்த பரிசு தொகுப்பின் புகைப்படங்கள் இணையத்தின் வெளியாகி வைரலாகி வந்தது. அதாவது சிவப்பு பரிசு பெட்டியில் தங்க நிறத்தில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

மேலும் அதில் ‘எங்கள் தேவி மற்றும் தேவதைகளின் தெய்வீக அருளால் நாங்கள் ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமணத்தை கொண்டாடுகின்றோம். நல்வாழ்த்துக்கள் நீடா மற்றும் முகேஷ் அம்பானி என எழுதப்பட்டிருந்தது. பரிசு பொருட்களில் வெள்ளி நாணயங்கள் மற்றும் இனிப்பு மற்றும் கார வகைகள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here