latest news
ஆளும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்…அடுத்த மாதம் அன்புமணி ராமதாஸ் காட்டப் போகும் அதிரடி…
அடுத்த மாதமான அக்டோபர் மாதம் நான்காம் தேதி தருமபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும், இதற்கு வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தருமபுரி – காவேரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தும் விதமாக அடுத்த மாதமான அக்டோபர் நான்காம் தேதி வெள்ளிக்கிழமையன்று அன்று அரை நாள் மட்டும் தருமபுரி மாவட்டம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பாட்டளி மக்கள் கட்சித்தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரத்து இருனூரு அடிக்கும் கீழாக சென்றுவிட்டது என்றும், வேளாண்மைக்கு புத்துயிர் ஊட்டுவது சாத்தியமற்றதாகிவிட்டது என்றும் தனது அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் சொல்லியிருக்கிறார்.
எனவே தருமபுரி மாவட்டம் வறட்சி மாவட்டமாக தொடர்வதை அனுமதிக்க முடியாது எனவும், தருமபுரி – காவேரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த அரசை வலியுறுத்தும் விதமாக இந்த அற வழிப்போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட உழவர்கள் மற்றும் அனைத்து தரப்பிலிருந்து தனக்கு வந்த வேண்டுகோளை ஏற்றும், தருமபுரி மாவட்டத்தின் வளமான எதிர்காலத்திற்காகவும் அடுத்த மாதம் நான்காம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த அற வழி, அரை நாள் கடையடைப்பு போராட்டத்திற்கு வணிகர்கள் உட்பட அனைவரும் தங்களின் முழு ஆதரவினை கொடுத்து, தருமபுரி – காவேரி உபரி நீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என கோருவதாக அன்புமணி ராமதாஸ்வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.