Connect with us

india

என்னது இந்த எருமையோட விலை 23 கோடியா…? அப்படி என்னப்பா ஸ்பெஷல்…!

Published

on

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஒரு எருமை மாட்டின் விலை 23 கோடி என்று கூறியிருக்கிறார்கள். எதற்காக இவ்வளவு விலை என்பதை இதில் தெரிந்து கொள்வோம்.

மீரட்டில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மூன்று நாள் சிறப்பு கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் இந்திய விவசாயிகள் கண்காட்சி மற்றும் வேளாண் வணிக கண்காட்சி என்று மூன்று நாட்கள் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஹரியானா மாநிலம் சிர்சாவைச் சேர்ந்த அன்மோல் என்ற சிறப்பு வாய்ந்த எருமை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் இந்த எருமை மாட்டின் விலை மிக உயர்ந்தது. அதன் விலையை வைத்து நாம் 2 பேன்சி ரோல்ஸ் ராயல்ஸ் கார்கள் மற்றும் 10 ஸ்பெஷல் கார்களை வாங்கி விட முடியும் என்று கூறுகிறார்கள். அது கூட வேண்டாம் அந்த விலையில் நாம் 20 சொகுசு பங்களாக்களை கூட வாங்கி விட முடியும். இந்த சிறப்பு வாய்ந்த அன்மோலை பார்ப்பதற்கு பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான மக்கள் வந்து சென்றனர்.

அன்மோல் எருமையின் உரிமையாளர் இந்த எருமை மாட்டை விற்றால் சுமார் 23 கோடிக்கு போகும் என்று கூறியிருக்கின்றார். அன்மோல் சாதாரண உணவுகளை சாப்பிடுவதில் அதற்கென்று சிறப்பு உணவு உள்ளது. அன்மோலை கவனித்து வரும் ஜெகத்சிங் கூறும் போது அன்மோல் அதன் 8 ஆண்டுகளில் நிறைய பரிசுகளை வென்றிருக்கின்றது.

ஒவ்வொரு நாளும் ஐந்து கிலோகிராம் பால், 4 கிலோ கிராம் சுவையான மாதுளை, 30 வாழைப்பழங்கள், வலுவான தசைகளை வளர்க்க 20 முட்டைகள், பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு உள்ளிட்ட சிறந்த உணவுகளை எடுத்துக் கொள்கின்றது. ஒரு நாளைக்கு இரண்டு முறை குளித்து மிக ஆரோக்கியமாக இருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் இதற்கு தினமும் கடுகு மற்றும் பாதாம் எண்ணெயில் மசாஜ் செய்யப்படுகின்றது.

ஒவ்வொரு மாதமும் 4 முதல் 5 லட்சம் ரூபாய்க்கு மக்கள் இந்த எருமையின் விந்துக்களை வாங்கி செல்கிறார்கள். இந்த விந்துவை சேகரித்து சிர்சாவைச் சேர்ந்த ஒரு குழு விற்பனை செய்து வருகின்றது. அன்மோல் முர்ரா இனத்தை சேர்ந்தது. இந்த மாடு விந்துவை அரிதாகவே வெளியிடும். இந்த எருமையின் உரிமையாளர் அதன் உணவுக்கு மட்டும் 60 ஆயிரம் தெரிவித்திருந்தார். மேலும் அந்த எருமையின் விந்துவை விற்பனை செய்வதன் மூலம் ஒவ்வொரு மாதமும் 4 முதல் 5 லட்சம் வரை அவருக்கு லாபம் கிடைக்கின்றதாம். இதைக் கேட்ட பலரும் ஆச்சரியப்பட்டு போனனர்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *