Connect with us

india

ஹோட்டல் உரிமையாளர் விவகாரம்…கட்சிகள் கடும் கண்டனம்…மன்னிப்பு கேட்ட அண்ணாமலை…

Published

on

Annamalai Rahul Gandhi

 

நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோவை ஹோட்டல் உரிமையாளர் ஜிஎஸ்டி வரி குறித்து பேசிய உரையாடல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கேள்வி கேட்டிருந்த தனியார் உணவகத்தின் உரிமையாளர் நிதி அமைச்சரை சந்தித்து தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தங்களது கடுமையான விமர்சனத்தையும், கண்டனத்தையும் முன் வைத்திருக்கின்றனர்.

கோவை ஹோட்டல் உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்தது ஆணவத்தின் உச்சம் என்றும், இது கண்டனத்திற்குரியது எனவும் ஆட்சியாளரகளிடம் கேள்வி கேட்டால் அவமதிப்புடனும், மரியாதைக்குறைவகவும் நடத்துகிறார்கள் என்றும் பாராளுமன்ற எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.

covai hotel owner

covai hotel owner

இதே போல் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இது பற்றி பேசுகையில் ஹோட்டல் உரிமையாளர் கேட்ட கேள்விகள் எல்லாம் உண்மையானது என்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து அவர் கேட்ட கேள்விகள் நாடு முழுவதும் பரவி விட்டது, இனி இதை யார் நினைத்தாலும் மறைக்க முடியாது என தனது கண்டனக்குரலை எழுப்பியுள்ளார்.

ஹோட்டல் உரிமையாளர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து வருத்தம் தெரிவித்த வீடியோ வெளியான விவகாரத்தில் பாஜகவின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோரியிருக்கிறார்.

பாஜகவினர் சிலரின் செயலுக்காக தான் மன்னிப்பு கோருவதாகவும், ஹோட்டல் உரிமையாளர் தமிழக வணிகத்தின் தூனாக விளங்குகிறார், மாநில மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிட்ட பங்களிப்பை நல்குகிறார். அவரிடம் தனிப்பட்ட முறையில் பேசி தனது வருத்தத்தினையும் , மன்னிப்பையும் கோரியுள்ளதாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை பதிவில் தெரிவித்திருக்கிறார்.

 

google news