latest news
நீட் குறித்து நடிகர் விஜயின் பேச்சு… இதெல்லாம் பாஜகவுக்கு நல்லது தான்… அண்ணாமலை பேட்டி…!
நீட் தேர்வு தொடர்பாக இன்னும் பல விஷயங்களை தெரிந்துகொண்டு பேசினால் நல்லது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருக்கின்றார் .
இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருந்ததாவது: “நீட் தேர்வு குறித்து நடிகர் விஜய்க்கு பேசுவதற்கு உரிமை இருக்கின்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் பாமக கூட நீட் தேர்வுக்கு எதிராக தான் இருக்கின்றது. நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் முதலில் அதற்கான புள்ளி விவரங்களை கையில் வைத்துக் கொண்டு பேசினால் நன்றாக இருக்கும்.
திமுகவை சார்ந்த அரசியலை விஜய் கையில் எடுப்பது சந்தோஷம்தான். திமுக சார்ந்த கொள்கை உடன் நடிகர் விஜய் பேசியது பாஜகவின் வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும். நீட் தேர்வு தொடர்பாக இன்னும் பல விஷயங்களை தரவுகளை தெரிந்து கொண்டு நடிகர் விஜய் பேசியிருந்தால் நன்றாக இருக்கும். இரு மொழிக் கொள்கை மற்றும் நீட் தேர்வு எதிர்ப்பு என்று எல்லா கட்சிகளும் வேண்டுமானால் ஆதரிக்கட்டும்.
ஆனால் பாஜக மும்மொழி கொள்கை மற்றும் நீட் தேர்வு என தெளிவான கொள்கை உடன் பயணித்து வருகின்றது. இரு மொழி கொள்கையை தாண்டி மூன்றாவது மொழியை கற்பதற்கு மக்கள் விரும்புகிறார்கள். மத்திய அரசை திமுக பாணியில் ஒன்றிய அரசு என்று நடிகர் விஜய் கூறுகின்றார். இதிலிருந்தே அவர் திமுகவை ஆதரிப்பது போல் தான் இருக்கின்றது. 2021க்கு முன்பு வரை மத்திய அரசு என்று கூறி வந்தார்கள்.
தற்போது ஏன் அனைவரும் ஒன்றிய அரசு என்று கூறுகிறார்கள்” என்று பேசி இருந்தார் அண்ணாமலை. தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நேற்று நடைபெற்ற கல்வி விருது விழாவில் நீட் தேர்வு குறித்து பேசி இருந்தார். நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது, தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தை நான் வரவேற்கிறேன் நடிகர் விஜய் பேசி இருந்த நிலையில் அதற்கு அண்ணாமலை பதிலளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.