latest news
ஆறாவது முயற்சியில் தான் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார்… அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்த கைதான கும்பல்
பகுஜன் சமாஜ் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கி இருக்கும் நிலையில் கைது செய்யப்பட்ட கும்பல் கொடுத்த வாக்குமூலம் அடுத்த அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.
சென்னை பெரம்பலூரில் வசிந்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர் வீட்டின் முன் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். காவல்துறையினர் அவரை மீட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்த நிலையில் உயிரிழந்தார் எனக் கூறப்பட்டது.
ஆம்ஸ்ட்ராங் உடல் நேற்று பிரம்மாண்ட மக்கள் கூட்டத்துக்கு இடையே எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 8 பேரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருவதாக வடசென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்தார்.
மேலும் கைதான கும்பல், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ஏற்கனவே ஐந்து முறை முயன்று இருக்கின்றனர். ஆனால் அப்போது போதிய ஆட்கள் இல்லாததால் அது தோல்வியில் முடிந்தது. ஆற்காடு சுரேஷ் இறந்த நாளில் இருந்தே ஆம்ஸ்ட்ராங்கை கண்காணித்து வந்ததாகவும், அவர் இறப்பிற்கு இது பழிவாங்கும் முயற்சி தான் எனவும் கூறப்படுகிறது.
பத்து தனிப்படை வைத்து தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டோம். ஆற்காடு சுரேஷின் தம்பி தான் ஏ1 குற்றவாளிகள். இன்னும் சிலர் அவராகவே சரணடைந்தனர். ஆம்ஸ்ட்ராங் அவர் கட்டிக்கொண்டு இருந்த வீட்டுக்கு மாலை வருவார் எனத் தெரிந்தே இந்த முயற்சியை செய்து அவரை கொலை செய்ததாக கூறினார்கள்.
ஆம்ஸ்ட்ராங் அருகில் இருந்த பாலாஜிக்கு உணவு டெலிவரி என்று கூறிய ஆம்ஸ்ட்ராங்கை நெருங்கினர். பின்னர் பாலாஜி பள்ளத்தில் தள்ளிவிட்டு ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டினர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இச்சம்பவத்தினை தடுக்க வந்த ஆம்ஸ்ட்ராங் அண்ணன் வீராசாமிக்கும் வெட்டி விழுந்ததாக கூறப்படுகிறது.