Connect with us

latest news

ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் செல்போன் மீட்பு… அதிமுக கவுன்சிலர் அதிரடி கைது!

Published

on

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கொலையாளிகளின் செல்போனை ஹேண்டில் செய்த அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் என்பவரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட வழக்கு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தனிப்படை போலீஸார் கைது படலம் தொடர்ந்து வருகிறது.

கொலை செய்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் பாலு, பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். போலீஸ் காவலில் இருந்த ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

இந்தநிலையில், கொலையாளிகளுக்கு உடந்தையாக இருந்த திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலர் ஹரிதரனை போலீஸார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருள் மற்றும் ஹரிஹரன் ஆகியோரின் நண்பர்தான் இந்த ஹரிதரன் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

கைது செய்யப்பட்ட 8 பேரின் செல்போன்கள் ஹரிதரன் வசம் இருந்ததையும் கண்டுபிடித்த போலீஸார், அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொசஸ்தலை ஆற்றில் வீசப்பட்ட அந்த செல்போன்களையும் போலீஸார் கைப்பற்றியிருக்கிறார்கள். அந்த செல்போன்களை வழக்கறிஞர் அருள் அறிவுறுத்தலின்படி, ஹரிசுதன் கொசஸ்தலை ஆற்றில் வீசியதும் தெரியவந்திருக்கிறது.

google news