Connect with us

Cricket

இங்க நான் தான் கிங்கு…சேப்பாக்கத்தில் சிலிர்த்து எழுந்த அஷ்வின்…

Published

on

Ashwin Jadeja

இந்தியா – வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்கியது. போட்டியின் துவக்கத்திலேயே இந்திய அணியின் விக்கெட்டுகள் மலமலவென சரியத் துவங்கியது. தக்க நேரத்தில் பொறுப்புடன் விளையாடி சரிவிலிருந்து இந்திய அணியை மீட்டது தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணை. இதில் இந்திய வீரர் அஷ்வின் சதமடித்து அசத்தினார்.

பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் பதம் பார்த்த வந்த வங்கதேச அணி, இந்திய அணியுடனான டெஸ்ட் மற்றும் இருபது ஓவர் போட்டி தொடர்களில் விளையாட இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இலங்கையில் நடந்து முடிந்த ஒரு நாள் தொடரில் பின்னடைவை சந்தித்த இந்திய அணி பங்களாதேக்கு எதிரான போட்டிகளில் அசத்தல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

Jadeja Ashwin

Jadeja Ashwin

இந்த இரு அணிக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று துவங்கியது.

துவக்கத்தில் வங்கதேசத்தின் பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிய இந்திய அணி பேட்ஸ்மேன்கள் நூற்றி நாற்பத்தி நான்கு ரன்கள் எடுப்பதற்குள் ஆறு முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.  இந்திய அணிக்கு தனது சொந்த மண்னிலே இப்படி ஒரு நிலைமையா? என கவலையோடு இருந்த இந்திய ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் விதாமாக ஆல்-ரவுண்டர் அஷ்வின் சதம்டித்தார்.

நூற்றி எட்டு பந்துகளில் நூறு ரன்களை எடுத்தார் அஷ்வின். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் அடிக்கும் ஆறாவது சதமிது. அதோடு மட்டுமல்லாமல் இந்த ஆறு சதங்களில் சேப்பாக்கம் மைதானத்தில் அஷ்வின் அடிக்கும் இரண்டாவது சதம் இது. இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட அஷ்வினுக்கு துணையாக களத்தில் நின்று வரும் ஆல்-ரவுண்டர் ஜடேஜா என்பத்தி ஆறு ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து வருகிறார்.

முதல் நாள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து முன்னூற்றி முப்பத்தி ஒன்பது ரன்களை எடுத்துள்ளது இந்தியா. பத்து பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்கள் என நூற்றி இரண்டு ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து வருகிறார் போட்டியின் இன்றைய நாளின் கதாநாயகன் ரவிச்சந்திரன் அஷ்வின்.

google news