Cricket
என்னடா இது வேர்ல்டு சாம்பியன்ஸுக்கு வந்த சோதனை… ஆஸி-யின் செமிஃபைனல் வாய்ப்பு எப்படியிருக்கு?
டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் நிச்சயம் வென்றே ஆக வேண்டிய சூழலில் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.
ஆப்கானிஸ்தானுஜ்க்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா குரூப் 1-ல் நெட் ரன் ரேட் அடிப்படையில் இந்தியாவுக்கு அடுத்து இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கெதிரான கடைசி சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்தியா தோல்வியடைந்தாலும் +2.425 என்கிற பாசிடிவ் ரன்ரேட் சாதகமாகவே இருக்கிறது.
இந்தியா வெளியேற என்ன நடக்க வேண்டும்?
ஆஸ்திரேலியாவும் ஆப்கானிஸ்தானும் தங்களது கடைசி சூப்பர் 8 போட்டியில் 120 ரன்கள் வித்தியாசத்தில் எதிரணியை வீழ்த்தி வெற்றிபெற்றால் மட்டுமே அந்த இரண்டு அணிகளும் அரையிறுதிக்கு இந்தியாவை முந்தி முன்னேறும்.
அதேநேரம், ஆஸ்திரேலியா இந்தியாவை ஹெல்த்தியான ரன் ரேட்டில் வீழ்த்தி, ஆப்கானிஸ்தான், வங்கதேசத்துக்கு எதிரான கடைசி போட்டியில் தோல்வியடைய வேண்டும் என்பதே ஆஸ்திரேலியா அரையிறுதிக்குப் போக இருக்கும் முக்கியமான வாய்ப்பு. ஒருவேளை இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தால் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிக்குச் செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன.