Connect with us

latest news

பகுஜன் சமாஜ் கட்சியில் ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு பதவி… புதிய தலைவர் யார் தெரியுமா?

Published

on

மறைந்த பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவர் மனைவிக்கு பொறுப்பு கொடுத்து புதிய பொறுப்பாளர்கள் நியமனமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ந் தேதி பெரம்பலூரில் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தினையே அதிர செய்தது. இதை தொடர்ந்து காவல்துறை இவ்வழக்கினை தீவிரமாக விசாரித்து வரும் நிலையில் தொடர்ச்சியாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். தலைவராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வாகி இருக்கிறார். கட்சியின் மாநில துணை தலைவராக இளமான் சேகர், மாநில பொருளாளராக கமலவேல் செல்வனும் நியமிக்கப்பட்டுள்ளார்.

வழக்கறிஞரான பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கினை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். தனது அரசியல் கொள்கையால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை முன்பே அறிந்த ஆம்ஸ்ட்ராங் பல வருடமாக திருமணம் செய்து கொள்ளாமலே இருந்தார். ஆனால் அவரை காதலித்த பொற்கொடி தந்தையின் மூலம் திருமணத்துக்கு சம்மதம் வாங்கினார்.

இருவருக்கு பெளத்த மத முறைப்படி திருமணம் நடந்தது. பொற்கொடிக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் 20 வயது வித்தியாசம் எனக் கூறப்படுகிறது. இத்தம்பதிக்கு ஒரு மகள் உள்ளனர். பொற்கொடி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

google news