காரை எட்டி உதைத்தால் கம்பி எண்ணும் பைக்-ரைடர்ஸ்…பெங்களூருவில் புள்ளிங்கோஸின் அட்டகாசம்…

0
45
Bike Ride
Bike Ride

போக வேண்டிய இடங்களுக்கு சரியான நேரத்தில் சென்றடைய உதவுவதே வாகனங்கள். பஸ், கார், லாரி, ஆட்டோ என பல விதமான வாகனங்கள் கோடிக்கணக்கில் உலகில் இருக்கும் எல்லா சாலைகளிலும் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏற்படும் நெருக்கடியாலும், விதிகளை மீறி வாகனங்களை இயக்குவதாலும் அடிக்கடி விபத்து சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

அஜாக்கிரதையின் காரணமாகவும், அலட்சியத்தின் காரணமாகவும் விபத்துக்கள் நடந்து அதனால் அதிகமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இரு சக்கர வாகனங்கள் கையாளுவதற்கு எளிதாக இருப்பதனாலும் , நெருக்கடி நிறைந்த சாலைகளில் பயணத்தை எளிதாக்கவும் மற்ற போக்குவரத்து சாதனங்களை விட இரு சக்கர வாகனங்கள் அதிகம் உதவி வருகிறது.

Bengaluru
Bengaluru

ஆனால் இப்போது உள்ள நிலையில் இந்த இரு சக்கர வாகனங்களை அதிக வேகமாக ஓட்டி அதனால் விபத்து அபாயத்தை உருவாக்குபவர்களும் எண்ணிக்கையில் அதிகமாகி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக ஓட்டுநர் உரிமம் இல்லாத பள்ளி மாணவர்கள் பைக்குகளை ஓட்டும் விதங்களைப்பார்த்தாலே பயம் வந்து விடும். இப்படிப்பட்டவர்கள் தங்களது வாழ்க்கையையும் இழந்து, மற்றவர்களின் வாழ்க்கையையும் திசை மாற செய்து விடுகிறார்கள். போக்குவரத்து விதிமுறைகளைப்பற்றிய கவலை எல்லாம் இவர்களுக்கு கிடையாது.

பெங்களூரு மாரனேஹள்ளி – சில்க் போர்டு மேம்பாலத்தில் பைக்கில் சென்ற இளைஞர்கள் அதிவேகமாக சென்றதோடு மட்டுமல்லாமல் அராஜகத்திலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அத்துமீறல்களின் உச்சபட்சமாக மேம்பாலத்தில் சென்ற கார்களை கால்களால் எட்டி உதைத்திருக்கின்றனர். இந்த சம்பவம் பற்றிய வீடியோ வைரலாக பரவ, இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரையும் கைது செய்துள்ளது காவல் துறை. அதோடு மட்டுமல்லாமல் அவர்களிடமிருந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here