india
புதிதாக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது!.. பீகாரில் அதிர்ச்சி!. வைரலாகும் வீடியோ!…
மக்களின் போக்குவரத்தை சுலபமாகவே பாலங்கள் கட்டப்படுகிறது. குறிப்பாக இரு சக்கர மற்றும் கார் போன்ற வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் போக்குவரத்தில் நெரிசல் அதிகமாகி விட்டது. எனவேதான், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பாலங்களை கட்டும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
அதேநேரம், சில இடங்களில் பாலங்களை கட்டும் ஒப்பந்ததாரர்கள் பொருட்களில் ஊழல் செய்து மட்டமான பொருட்களை பயன்படுத்தி பாலங்களை கட்டி மக்களின் உயிரோடு விளையாடி வருகின்றனர். 2 வருடங்களுக்கு முன்பு குஜராத்தில் திறக்கப்பட்ட தொங்கு பாலம் இடிந்து விழுந்தது. அந்த விபத்தில் 141 பேர் உயிரிழந்தனர். ஆனாலும், ஒப்பந்ததாரர்கள் திருந்தவில்லை.
இந்நிலையில், நிதிஷ்குமார் முதல்வராக உள்ள பிகாரில் கட்டி முடிக்கப்பட்ட ஒரு பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்த சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாநிலம் ஆராரியாவில் இருக்கும் பக்ரா ஆற்றின் மேல் கட்டப்பட்டிருந்த பாலத்தின் பகுதி இன்று இடிந்து விழுந்தது. சுமார் 7 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. நல்லவேளையாக இந்த பாலம் இன்னும் திறக்கப்படவில்லை என்பதால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
https://x.com/ANI/status/1803033213998391359