Connect with us

india

Camlin நிறுவனர் சுபாஷ் தண்டேகர் காலமானார்… பிரபலங்கள் அஞ்சலி…!

Published

on

கேமலின் நிறுவனத்தின் ஓனர் சுபாஷ் தண்டேகர் காலமானார்.

கேம்ப்ளிங் குரூப் ஆஃப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிறுவனரான சுபாஷ் தண்டேகர் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த இவர் மும்பையில் ஹிந்துஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இவரின் இறுதி சடங்குகள் தாதரியில் உள்ள சிவாஜி பூங்கா மயானத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் அவரின் குடும்பத்தினர் மற்றும் கேமலின் நிறுவன ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். மேலும் சுபாஷ் தண்டேகரின் மறைவிற்கு மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அஞ்சலி செலுத்தினார்.

1946 ஆம் ஆண்டு தனியார் நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு பிறகு 1998 இல் பங்கு சந்தையில் பட்டியலிட்டு பொதுத்துறை நிறுவனமாக மாறியது. கேம்ப்ளின் நிறுவனம் 93 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஸ்டேஷனரி தயாரிப்பில் இந்த நிறுவனம்தான் முன்னணி வகுக்கின்றது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் 2011 ஆம் ஆண்டு முதல் ஜப்பான் நாட்டின் நிறுவனத்துடன் இணைந்து இயங்கி வருகின்றது. இந்த நிறுவனத்தின் 51% பங்குகளை ஜப்பான் நாட்டின் கோகுயோ நிறுவனம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…

Published

on

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர் தான் குமாரசாமி மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது என சொல்லியிருந்தார். இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பதவியை ராஜினாமா செய்தால் தானும் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என தெரிவித்துள்ளார்.

Siddaramaiah

Siddaramaiah

கர்நாடகா மூடா நில முறைகேடு தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் சித்த ராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு லோக் ஆயுத்தாவிற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் 3 பேர் அளித்த புகாரின் பேரில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு லோக் ஆயுத்தா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவர் பதவி விலக வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து சொல்லி வருகிறது.

இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சித்தராமையா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாருக்கு பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நில ஒதுக்கீடு புகாரில் ஜாமீனின் உள்ள மத்திய அமைச்சர் குமாரசாமி ஆகியோர் பதவி விலக வேண்டும். அவர்கள் பதவி விலகினால் தானும் முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயார் எனத் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

Cricket

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

Published

on

Rain-Play

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி தொடர்களில் விளையாட வந்துள்ள வங்கதேச அணி முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களின் திறமைக்கு ஈடுகொடுக்க முடியாமல் பரிதாபமாக தோற்றது. முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வைத்து நடந்தது.

துவக்கத்தில் இந்திய வீரர்களை அசைத்துப் பார்த்த பங்களாதேஷ் அணியை ஆல்-ரவுண்டர்களான அஷ்வின் – ஜடேஜா இணை தங்களது அபாரமான பேட்டிங் மற்றும் பந்து வீச்சினால் திணறடித்தனர். போட்டி நடக்க வேண்டிய ஐந்து நாட்களுக்குள்ளாகவே இரண்டு இன்னிங்ஸ்களும் முடிவடைந்து பங்களாதேஷ் பரிதாபமாக தனது வெற்றியை இந்திய அணியிடம் பறிகொடுத்தது.

இந்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று துவங்கியது.

Kanpur

Kanpur

டாஸ் வென்ற இந்திய அணி வங்கதேசத்தை பேட்டிங் செய்ய அழைத்தது. முப்பத்தி ஐந்து ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. போதிய வெளிச்சமின்மை காரணமாக நேற்றைய ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மூன்று விக்கெட்டுகளை இழந்து நூற்றி ஏழு ரன்களை எடுத்திருந்தது வங்கதேச அணி முப்பத்தி ஐந்து ஓவர்கள் நிறைவடைந்திருந்த நிலையில்.

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தங்கு தடை ஏதுமின்றி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு பந்து கூட வீசப்படாமல் இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது. பலத்த மழையின் காரணமாக இன்றைய ஆட்டம் நடைபெறாமல் போனாலும் நாளை முழுமையாக போட்டி நடைபெறும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகின்றனர் இரு நாட்டு அணி ரசிகர்களும்.

google news
Continue Reading

Cricket

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

Published

on

India Bangladesh

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் எதிர்த்து விளையாட இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி.

டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் வைத்து இந்த இரு அணிகளுக்கு இடையே நடந்து முடிந்தது. ஆல்-ரவுண்டர்கள் அஷ்வின் மற்றும் ஜடேஜாவின் சிறப்பான பங்களிப்பினால் வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியது இந்திய அணி.

துவக்கத்தில் தடுமாறினாலும் நேரம் செல்லச் செல்ல தனது ஆதிக்கத்தை அதிகரித்தது. இந்திய பவுலர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாரி இறுதியில் சரண்டரானது பங்களாதேஷ். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது. டாஸ் போடுவதில் தாம்தம் ஏற்பட்ட நிலையில் டாஸில் வெற்றி பெற்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்து வங்கதேசத்தை பேட்டிங் செய்ய பணித்தது.

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் மூன்று பேர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் தனது பேட்டிங்கை தடுமாற்றத்துடனே துவங்கியது வங்கதேசம்.

Deep

Deep

இருபத்தி ஆறு ரன்களை எடுத்திருந்த நிலையில் தனது முதல் விக்கெட்டை இழந்தது அந்த அணி, இருபத்தி ஒன்பது மற்றும் என்பது ரன் கள் எடுத்திருந்த நிலையில் முறையே தனது இரண்டாவது மற்றும் மூன்றாவது விக்கெட்டுகளை இழந்தது வங்கதேச அணி. இந்திய அணியின் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆல்-ரவுண்டர் அஷ்வின் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.

முப்பத்தி ஐந்து ஓவர்கள் வீசப்பட்டிருந்த நிலையில் வங்கதேச் அணி நூற்றி ஏழு ரன்களை எடுத்திருந்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இன்றைய ஆட்டம்  நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது நாளான நாளைய தினத்தினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் இரு நாட்டு அணி ரசிகர்களும்.

google news
Continue Reading

india

திண்டுக்கல் நிறுவனம் மீது புகார்..திருப்பதி லட்டு விவகாரத்தில் திருப்பம்…

Published

on

Tirupati

திருப்பதி கோவில் பிரசாத லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சை நாட்டையே உலுக்கியுள்ளது. திரைப்பட விழா ஒன்றில் லட்டு குறித்து பேசிய நடிகர் கார்த்தியை ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் கண்டிருத்திருந்த  நிலையில் தனது பேச்சு குறித்து மன்னிப்பு கோரியிருந்தார் கார்த்தி.

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறிய பொய்கள் மூலம் திருப்பதி கோவிலுக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைப்பதற்காக மாநிலம் முழுவதும் வருகிற 28ம் தேதி பூஜை நடத்தப்பட உள்ளதாக ஒய்எஸ்ஆர் கட்சி சார்பாக நடத்தப்படும் என ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பாக திண்டுக்கல்லை சேர்ந்த நெய் விநியோகிக்கும் ஏ.ஆர். நிறுவனத்தின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Ghee

Ghee

தரமற்ற பத்து லட்சம் கிலோ நெய் இந்த நிறுவனத்தின் மூலம் லட்டு தயாரிக்க சப்ளை செய்யப்பட்டுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் தேவஸ்தான அதிகாரி கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளது. கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வை புண்படுத்தும் விதமாகவும், உடல் நலக் கோளாறை விளைவிக்கும் விதமாகவும், மத்திய அரசின் அங்கீகாரமற்ற பரிசோதனை கூடத்தின் அறிக்கையை ஏற்று இந்த கொள்முதல் செய்யப்பட்டதாக தேவஸ்தானம் சார்பிலான மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஒரு கிலோ நெய்யை முன்னூற்றி பத்தொன்பது ரூபாய்க்கு தருவதாக கூறி, நான்கு டேங்கரின் மூலம் நெய் சப்ளை செய்யப்பட்டதாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருப்பதி லட்டு தொடர்பான விவகாரத்தில் குண்டூர் சரக ஐஜி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு ஆந்திர அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த புகார் அந்த குழுவிற்கு மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

திருப்பதி கோவிலுக்கு நான்கு நிறுவனங்களலிருந்து நெய் கொள்முதல் செய்யப்பட்டு வரப்பட்டதாகவும், அதிலும் கலப்படம் கடந்த நெய்யை திண்டுக்கல்லை சார்ந்த நிறுவனத்தின் மீதே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

google news
Continue Reading

cinema

அறிவுரை சொன்ன ஆந்திர துணை முதல்வர்…மன்னிப்பு கேட்ட கார்த்தி…

Published

on

karthi pavan kalyan

ஆந்திர மாநிலம் திருப்பதி கோவில் லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் திருப்பதி பக்தர்களை வேதனையடையச் செய்துள்ளது. திரும்பும் திசை எல்லாம் திருப்பதி கோவில் லட்டு பற்றிய பேச்சுக்கள் இருக்கும் நிலையாகி விட்ட நேரத்தில் திரைப்பட விழா ஒன்றில் நடிகர் கார்த்தி பேசியதற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண்.

சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்துள்ள “மெய்யழகன்” திரைப்படம் இம்மாதம் இருபத்தி ஏழாம் தேதி வெளியாக உள்ளது . இந்நிலையில் இந்த படத்தின் ப்ரமோ நிகழ்ச்சி ஆந்திராவில் நடக்க, அதில் படத்தின் நாயகனான கார்த்தி பங்கேற்றார்.

karthi

karthi

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நபர் கார்த்தியிடம் லட்டு வேண்டுமா? என கேட்க, அது உணர்வுப்பூர்வமான விஷயம், லட்டு பற்றி பேச வேண்டாம் என கார்த்தி கூறியிருந்தார்.

கார்த்தியின் இந்த பேச்சிற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண், சினிமா நிகழ்ச்சியில் லட்டுவை வைத்து நகைச்சுவை செய்யக்கூடாது என தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.  சனாதன தர்மம் குறித்து பேசும் போது நூறு முறை யோசித்து விட்டு பேச வேண்டும் என சொல்லியிருந்தார்.

இந்நிலையில் தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் கார்த்தி. அதோடு வெங்கடேச பெருமானின் பக்தன் என்ற முறையில் நமது பண்பாட்டின் மீது பிடிப்புடன் இருந்து வருவதாகவும் தனது சார்பான விளக்கத்தை சொல்லியிருக்கிறார் கார்த்தி.

 

google news
Continue Reading

Trending