ஒலிம்பிக்கில் கணக்கை துவக்குமா இந்தியா?…இறுதி சுற்றுக்கு தகுதியாகுயுள்ள வீராங்கனை…

0
148
Manu Paakkar
Manu Paakkar

ஃப்ரான்ஸ் தலை நகர் பாரீஸில் வண்ணமயமான துவக்க விழாவோடு ஒலிம்பிக் போட்டி துவங்கியுள்ளது. உலகில் உள்ள ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகள் மட்டுமே இந்த தொடர்களில் பங்கேற்க முடியும். அப்படி இருந்தும் இருநூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் வீரர்கள் உற்சாகமாக பங்கேற்று தங்களது திறமையை காட்டி வருகின்றனர்.

உலக அரங்கில் உள்ள நாடுகளை ஒரே நேரத்தில் ஒன்றிணைக்கும் நிகழ்வாகத்தான் இந்த ஒலிம்பிக் போட்டிகள் இருந்து வருகிறது. இந்த தொடரில் அமெரிக்கா, சீனா, அப்போதைய சோவியத் யூனியன் போன்ற நாடுகளே இது வரை தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது. இந்தியா தான் பங்கற்கும் சர்வதேச விளையாட்டு தொடர்களில் இது வரை அதிகம் சோபிக்காதது ஒலிம்பிக்காக மட்டும் தான் இருந்து வருகிறது.

France
France

 

கடந்து 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தான் அதிக இந்திய அணி அதிக பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியாவை பொறுத்த வரை ஒலிம்பிக் போட்டிகளில் இது முன்னேற்றமாகத் தான் பார்க்கப்படுகிறது. ஏழு பதக்கங்களை மட்டுமே வென்றுள்ள போதிலும். நடப்பு ஒலிம்பிக் தொடரில் அதிக பதக்கங்களை வென்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகளிர் துப்பாக்கி சுடுதல் பத்து மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிச்சுற்றிற்கு முன்னேறியுள்ளார். தகுதிச் சுற்றில் முதல் எட்டு இடத்தை பெறுபவர்களே இறுதிச்சுற்றிற்கு தகுதியடைவார்கள். 580 -27 x புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார்.  இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள மனு பாக்கர் இதே போல் மூன்றாம் இடத்தை பிடித்தால் கூட வெண்கலப் பதக்கத்தை வென்று விடுவார். ஆனால்  அவர் நிச்சயம் முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கத்தினை வெல்லுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here