Finance
ஒரே நாளில் அறனூற்றி நாற்பது ரூபாயா?…அசர வைத்த தங்கம் விலை உயர்வு!…
சென்னையில் விற்கப்பட்டு வரும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் கிராம் ஒன்றின் விலை ஏழாயிரம் என்ற புதிய உச்சத்தை தொட வைத்தது தங்கத்தின் விலை உயர்வு. தற்போது மெல்ல மெல்ல அடுத்தகட்ட உயர்வினை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று ஒரே நாளில் சவரன் ஒன்றிற்கு அறனூற்றி நாற்பது ரூபாய் (ரூ.640/-) உயர்ந்து அதிர்ச்சியை மேலும் அதிகரித்துள்ளது.
நேற்று இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூபாய் ஏழாயிரத்து நூற்றி அறுபதாக இருந்தது (ரூ.7,160/-). இன்று கிராமிற்கு என்பது ரூபாய் (ரூ.80/-) உயர்ந்து ஏழாயிரத்து இருனூற்றி நாற்பது ரூபாயாக (ரூ.7,240/-) உள்ளது.
இதனால் நேற்று ஒரு சவரனின் விலை ஐம்பத்தி ஏழாயிரத்து இருனூற்றி என்பது ரூபாயக்கு (ரூ.57,280/-) விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் அறனூற்றி நாற்பது ரூபாய் (ரூ.640/-) உயர்ந்து ஐம்பத்தி ஏழாயிரத்து தொல்லாயிரத்து இருபது ரூபாயாக (ரூ.57,920/-) இருக்கிறது.
ஓரே நாளில் இப்படி ஒரு உயர்வை சந்தித்துள்ள தங்கத்தால் நகைப்பிரியர்கள் சொல்ல முடியா சோகத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்.
தங்கம் ஒரு புறம் தலை வலியை தந்து வர, விலை உயர்வில் வேகம் காட்டாமல் கடந்த சில நாட்களாக ஒரே விலையில் நீடித்து வந்த வெள்ளியும் இன்று உயர்வை சந்தித்து வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது. நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை நூற்றி மூன்று ரூபாயாக (ரூ.103/-) இருந்த நிலையில் இன்று இரண்டு ரூபாய் (ரூ.2/-) அதிகரித்து நூற்றி ஐந்து ரூபாய்க்கு (ரூ.105/-) விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரு லட்சத்தி மூவாயிரம் ரூபாயாக (ரூ.1,03,000/-) இருந்து வந்த நிலையில், இன்று இரண்டாயிரம் ரூபாய் (ரூ.2000/-) அதிகரித்து ஒரு லட்சத்தி ஐந்தாயிரம் (ரூ.1,05,000/-) ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அடுத்தடுத்து உயர்ந்து வருவது ஆபரணப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.