Connect with us

latest news

தமிழகத்திற்கு நாளை ஆரெஞ்ச் அலர்ட்!.. வானிலை மையம் அறிவிப்பு…

Published

on

rain

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் 3 நாட்கள் வெயில் கொளுத்தியது. அதனின் 22ம் தேதி வரை புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்தது.

இந்நிலையில், தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணத்தால் இன்று சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல், நாளை (22.06.2024) முதல் 26.06.2024 தேதி வரை தமிழகத்தின் சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் எனவும், நீலகிரி, கோவை மாவட்ட மலை பகுதிகளில் சில இடங்களில் கன மழை எனவும், திருப்பூர், தேனி, தென் காசி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமாரி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என கூறப்பட்டிருக்கிறது. இங்கு ஆரெஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

google news