Connect with us

latest news

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம்!. பலி எண்ணிக்கை 29ஆக உயர்வு!.. முதல்வர் ஆலோசனை

Published

on

stalin

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் வசித்து வந்த சிலர் அந்த பகுதியில் விற்கப்படும் சாராயத்தை வாங்கி குடித்திருக்கிறார்கள். இதையடுத்து நள்ளிரவில் கண் எரிச்சல், வயிற்றுவலி, வாந்தி போன்ற உடல்நலக்கோளாறுகள் ஏற்பட்டது. எனவே, அதில், பலரும் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதில் சிலர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்கள். இதனால் அங்கு பதட்டம் நிலவியது. இறந்துபோனவர்களின் குடும்பங்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். சிலர் மதுரைக்கும், சிலர் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். எல்லா இடத்திலும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனது.

kallakurichi

தற்போது பலி எண்ணிக்கை 29ஆக உயர்ந்திருக்கிறது. அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகரிகள் அங்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து கள்ளச்சாராயம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை செய்யவிருக்கிறார். இந்த கூட்டத்தில் சில அமைச்சர்கள் மற்றும் காவல்துறை டிஜிபி, உளவுத்துறை டிஜிபி மற்றும் மதுவிலக்கு உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

29 பேர் பலியான சம்பவம் கருணாபுரம் பகுதியில் வசிக்கும் மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒருபக்கம், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி மற்றும் கலெக்டர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *