latest news
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்…கோலகலமான துவகத்திற்கு தயாராகும் வீரர்கள்…
மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் இன்று மாலை நாலு மணிக்கு கோலாகலாமாக துவங்க உள்ளது. இதற்கு முன்னர் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி இந்த போட்டிகளை துவக்கி வைக்க உள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கன மாநில விளையாட்டு போட்டிகள் இன்று முதல் வருகிற இருபத்தி நான்காம் தேதி வரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு நகரங்களில் நடைபெறுகிறது. முப்பத்தி ஆறு வகையான விளையாட்டுகள் நடத்தப்பட உள்ளது.
இந்தாண்டு தனி நபர் மற்றும் குழுப் போட்டிகளுக்கான மொத்த பரிசுத் தொகையை ரூபாய் முப்பத்தி ஏழு கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த போட்டிகளுக்கான துவக்க விழா இன்று மாலை நாலு மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெறுகிறது.
பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற துளசிமதி, டிரிபிள் ஜம்ப் பிரவீன் சித்ரவேல் ஆகியோர் துவக்க விழாவில் ஜோதியை ஏந்திச் செல்ல உள்ளனர். தமிழக துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று போட்டிகளை துவக்கி வைக்க உள்ளார்.
போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அணியினருடன் வரும் அலுவலர்களுக்கும் டி-ஷர்ட் வழங்கப்பட உள்ளது. பள்ளி, கல்லூரி, மாணவர்கள், பொதுப்பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழக அரசு ஊழியர்கள் என ஐந்து வகை பிரிவாக நடத்தப்பட்ட போட்டிகளில் பதினொன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர்.
மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகள் நிறைவடைந்திருந்த நிலையில் இதில் வெற்றி பெற்றுள்ள முப்பத்தி மூவாயிரம் வீரர், வீராங்கனைகள் மாநில விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட உள்ளனர்.