Connect with us

latest news

கார் விபத்தில் இறந்த காதலனை திருமணம் செய்யும் காதலி… Ghost wedding இப்படி தான் நடக்குமா?

Published

on

தன்னுடைய காதலனை கார் விபத்தில் இழந்த காதலி ஒருவர் கோஸ்ட் வெட்டிங் என்னும் பேய் திருமணத்தை செய்து கொள்ள இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தைவானை சேர்ந்த யூ என்ற பெண் சமீபத்தில் தன்னுடைய காதலர் மற்றும் நண்பர்களுடன் காரில் பயணம் செய்து தருகிறார். எதிர்பாராத விதமாக கார் திடீரென விபத்தில் சிக்கியது. இதில் யூ விற்கு காலில் அடிபட்டது.  அங்கிருந்த மற்றவர்களுக்கும் அடிபட்டிருந்த நிலையில் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

ஆனால் காரில் பயணம் செய்த யூ வின் காதலர் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டார். தன்னுடைய காதலர் மீது வைத்த காதலை கைவிட முடியாது தற்போது கோஸ்ட் வெட்டிங் செய்துகொள்ள இருக்கிறார். தன்னுடைய காதலருக்கு ஒரு தாய் மட்டுமே இருப்பதால் அவரை கடைசி வரை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் யூ இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

சைனாவில் 3000 ஆண்டுகள் பழமையான இந்த திருமணம் வழக்கமான ஒன்றுதான். திருமணம் ஆகாமல் இறந்தவர்கள் தங்களை யாரும் நேசிக்கவில்லை என வருத்தப்படக் கூடாது என்பதற்காக அவர்களை பிடித்தவர்கள் மானசீகமாக இவ்வாறு திருமணம் செய்து கொள்வார்கள்.

இறந்தவர்களின் புகைப்படம் மற்றும் உடைகளை வைத்து வெகு விமர்சையாக சாதாரண திருமணம் கூடே இது நடத்தப்படும். இந்த திருமணத்தை செய்து கொண்டவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அவர்களுக்காக அர்ப்பணிப்பார்கள். மேலும் அவர்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து கடைசி வரை இவர்கள் நினைவிலேயே வாழலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

google news