india
தலைக்கு மேல் காத்திருந்த எமன்… இடிந்து விழுந்த கட்டடம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!
கட்டடம் இடிந்து விழுந்த போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த 2 சிறுவர்கள் நொடிப்பொழுதில் உயிர் தப்பிய பரபரப்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
உத்திரபிரதேச மாநிலம், மீரட் நகரில் சதார் பஜார் என்கின்ற பகுதி உள்ளது. அந்த பகுதி வழியாக இரண்டு சிறுவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அந்த பகுதியில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்து பயங்கர விபத்துக்குள்ளானது. சதார் பஜாரில் சைன சமூக அறக்கட்டளைக்கு சொந்தமான மிகவும் பழமையான அதாவது 100 முதல் 150 வருட பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது.
ஏற்கனவே பாலடைந்தது போல் இருக்கும் அந்தக் கட்டிடம் அப்படியே விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் ஒரு ஆறு முதல் ஏழு வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள் அந்த கட்டிடம் உள்ள நடைபாதை வழியாக நடந்து கொண்டே சென்றிருந்தார்கள். கட்டிடம் அவர்கள் கடந்து சென்ற அடுத்த நொடியே இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவியில் பதிவாகி இருக்கின்றது. சிறுவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இந்த சிசிடிவி வீடியோவானது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. இதை பார்த்த பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இப்படி பாழடைந்து போன கட்டிடத்தை இடிக்காமல் எதற்காக வைத்திருந்தார்கள் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
મેરઠમાં 150 વર્ષ જૂનું જર્જરિત મકાન થયું ધરાશાયી
રસ્તા પરથી પસાર થતા બાળકો માંડ માંડ બચ્યાં
તંત્રએ અગાઉથી જ મકાન પડવાની આપી હતી સૂચના#Meerut #BuildingCollapse #ViralVideo pic.twitter.com/EXUTdxD8GO
— DD News Gujarati (@DDNewsGujarati) October 12, 2024