latest news
அப்போ இன்னைக்கு கும்மாளம் தானா?…சூப்பரா இருக்காமே சீசன் குற்றாலத்துல…
குற்றாலத்தில் நேற்று அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. அபாய வளைவுகளை தாண்டி தண்ணீர் விழுந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் குற்றாலத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் அதிக ஏமற்றமடைந்தனர்.
ஐந்தருவி மற்றும் புலியருவிகளில் குளிக்க விடுக்கப்பட்டிருந்த தடையானது நேற்று காலை முதல் விலக்கிக்கொள்ளப்பட்டது. இது சுற்றுலாப் பயணிகளுக்கு சிறிது ஆறுதலைத் தந்தது. மிதமான சாரல், குளிர் தென்றல் காற்று என ரம்மியான நிலையோடே காணப்பட்டது நேற்று.
இன்று காலை எட்டு முப்பது மணி நிலவரத்தின் படி குற்றாலத்தில் குளிக்க எந்த அருவிகளுலும் தடை விதிக்கப்படவில்லை. குற்றாலத்தின் பிரதான அருவிகளான ஃபை ஃபால்ஸ், மெயின் அருவி, பழைய குற்றாலம், புலி அருவிகளில் இயல்பான நிலையிலேயே தண்ணீர் விழுந்து வருகிறது.
வாரத்தின் வேலை நாட்கள் என்பதால் கூட்டம் சுமாராகவே இருந்து வருகிறது. வானம் முழுவதும் கருமேகக்கூட்டங்களால் சூழ்ந்தே காணப்பட்டது. மனதை மயக்கும் இதமான தென்றல் காற்று, அவ்வப்போது விழுந்து வரும் சிலு, சிலு, சாரல் என உற்சாகமான சூழலே இருந்து வருகிறது.
ஐந்தருவியில் குளித்து மகிழ அதிக ஆர்வம் காட்டி வந்தனர் சுற்றுலாப் பயணிகள். மெயின் அருவி, புலி அருவிகளில் ஐந்தருவியை விட சற்றே குறைவான கூட்டம் தென்பட்டது.
பழைய குற்றாலத்தில் வார நாட்களில் இருக்கக் கூடிய எப்போதும் போதான அதே இயல்பானக் கூட்டம் இருந்து வருகிறது. இன்றைய தினம் குற்றாலத்திற்கு இன்பச்சுற்றுலா செல்ல திட்டமிட்டிருப்பவர்களுக்கு ஆறுதல் தந்து ஆனந்ததை தரக் கூடிய விஷயங்களாக பார்க்ககூடியவைகள் இதுவரை குளிக்க தடை ஏதுமில்லாதது, குளு,குளு சூழல், இதமான காற்று, சிலு.சிலுவென விழும் சாரல்.