india
”என்னுடையது தான்” உரிமைக் கோரிய இருவர்… தானே தன்னுடைய எஜமானரை கண்டுபிடித்த மாடு
ஐந்தறிவு ஜீவன்கள் எப்போதுமே தன்னுடைய நன்றி உணர்ச்சியை மறக்காமல் இருக்கும். அதை ஒவ்வொரு நேரத்திலும் காட்டிக்கொண்டு தான் இருக்கும் என்பதை சமீபத்திய விஷயம் உதாரணமாகி இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், மகேஷ்கஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ராய் அஷ்கரன்பூர் கிராமத்தில் வசிப்பவர் நந்த்லால். அவரின் எருமை மாடு, கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போய்விட்டது. இதனால் மாட்டை நந்த்லால் தனது எருமை மாட்டை பல இடங்களில் தேடி கொண்டு இருக்கிறார்.
ஆனால், அந்த மாடு அருகில் உள்ள கிராமத்தில் இருப்பதாக தகவல்கள் வந்திருக்கிறது. நந்த்லால் உடனே அந்த கிராமத்தில் வசிக்கும் ஹனுமான் வீட்டிற்கு சென்று மாட்டை கேட்டு இருக்கிறார். ஆனால் ஹானுமான் அந்த மாடு தன்னுடையது எனக் கூறி பிரச்னை செய்து இருக்கிறார். இதனால் கடுப்பான நந்த்லால் அருகில் இருந்த காவல்நிலையத்தில் ஹனுமான் மீது புகார் கொடுத்து இருக்கிறார்.
போலீஸார் இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இருந்தும் பல மணி நேரம் தாண்டியும் அதற்கான விடை கிடைக்கவே இல்லை. இருவருமே மாற்றி, மாற்றி அதை தங்கள் மாடு என பிரச்னை செய்துக்கொண்டு இருக்கின்றனர்.
உடனே காவலர் இந்த பிரச்னைக்கு முடிவெடுக்க ஒரு யோசனையை கையில் எடுக்கிறார். மாட்டை நடுவில் நிறுத்தி நந்த்லால் மற்றும் ஹனுமான் இருவரையும் அவரவர் ஊரின் நுழைவாயிலில் நிற்க வைத்தனர். மாடும் சரியாக நந்தலால் ஊரை நோக்கி செல்ல பிரச்னை ஓய்ந்தது. எஜமானரை தானே கண்டுப்பிடித்த மாட்டின் செயல் பலருக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.