Connect with us

india

சிறுமி தொடர்பான போக்சோ வழக்கு!.. எடியூரப்பா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!…

Published

on

yeddyurappa

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது தொடரப்பட்ட போக்சோ வழக்கு தொடர்பாக அவர் மீது சிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

உதவி கேட்டு போனது சிறுமியை எடியூரப்பா பலாத்காரம் செய்தார் என கடந்த மார்ச் மாதம் பெங்களூர் சதாசிவ நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக தன் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டிருப்பதாக எடியூரப்பா தெரிவித்தார். மேலும், போக்சோ வழக்கை ரத்து செய்யுமாறு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் எடியூரப்பா மனு தாக்கல் செய்தார்.

புகார் கொடுத்த சிறுமியின் தாய் இறந்து போனார். தற்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் போக்சோ வழக்கின் கீழ் எடியூரப்பாவை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஒருபக்கம், போலீசார் விசாரித்து வந்த வழக்கு இப்போது சிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. மேலும், விசாரணைக்கு ஆஜராகமாறு எடியூரப்பாவுக்கு சம்மன் அனுப்பியது காவல்துறை. ஆனால், ஜூன் 17ம் தேதிதான் ஆஜராக முடியும் என பதில் கூறினார் எடியூரப்பா.
அதைத்தொடர்ந்து 17ம் தேதி அவரிடம் போலீசார் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

ஒருபக்கம், நீதிமன்றம் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது. எனவே, எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை சிஐடி போலீஸ் சார்பில் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *