Connect with us

Cricket

நேற்றிரவு தான் முடிவெடுத்தேன் – டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார் ஸ்டூவர்ட் பிராட்..!

Published

on

Stuart-Broad-Featured-Img

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் தற்போது நடைபெற்று வரும் ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். வலதுகை பந்துவீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்க போவது ஞாயிறு அல்லது திங்கள் கிழமையாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஸ்டூவர்ட் பிராட் வெற்றிகர பவுலர்களில் ஒருவராக இருந்துவந்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக 166 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் ஸ்டூவர்ட் பிராட் 600 விக்கெட்களை கைப்பற்றி இருக்கிறார். 2007 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் களமிறங்கினார்.

Stuart-Broad

Stuart-Broad

கடந்த 16 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் ஸ்டூவர்ட் பிராட் பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளார். எனினும், கிரிக்கெட்டில் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக ஸ்டூவர்ட் பிராட் உருவெடுத்துள்ளார். லன்டனில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் பேசிய ஸ்டூவர்ட் பிராட் கூறியதாவது..,

“நாளை அல்லது திங்கள் கிழமை கிரிக்கெட்டில் எனது கடைசி போட்டியாக அமைய இருக்கிறது. இது மிகவும் அழகான பயணம். நாட்டிங்கம்ஷையர் மற்றும் இங்கிலாந்து பேட்ஜ்-ஐ அணிந்து கொள்வது எப்போதுமே, எனக்கு பெருமை மிக்க தருணமாகவே இருந்து வந்துள்ளது. நேற்று இரவு 8.30 மணிக்கு தான் முடிவு செய்தேன்.”

“இதுபற்றி நான் கடந்த சில வாரங்களாக நினைத்து கொண்டிருந்தேன். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான போட்டிகள் எனக்கு எப்போதும், முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்து வந்துள்ளது. எனக்கும், அணிக்கும் எதிரான போட்டிகளை நான் எப்போதும் விரும்பி இருக்கிறேன்.”

Stuart-Broad-1

Stuart-Broad-1

“ஆஷஸ் கிரிக்கெட் மீது எனக்கு தீராக்காதல் உள்ளது. எனது கடைசி கிரிக்கெட் ஆஷஸ் தொடரில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். நேற்று இரவு ஸ்டோக்சியிடமும், இன்று காலை டிரெஸ்ஸிங் ரூமிலும் இதனை அறிவித்தேன். இது தான் சரியான தருணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்,” என்று தெரிவித்தார்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸ்-இல் இங்கிலாந்து அணி 283 ரன்களை குவித்தது. பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸ்-இல் 295 ரன்களை குவித்தது.

இரண்டாவது இன்னிங்ஸ்-இல் இங்கிலாந்து அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 389 ரன்களை குவித்துள்ளது. இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட் 2 ரன்களுடனும், ஜேம்ஸ் ஆன்டர்சன் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி 377 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *