Cricket
வெயிட்டிங்லேயே வெறி ஏறுது…மழையால் போட்டி துவங்குவதிக் தாமதம்!…
இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வைத்து இன்று துவங்கப்படுவதாக இருந்தது. போட்டியில் பங்கேற்க இரு நாட்டு அணி வீரர்களும் தங்களை தீவிரமாக தயார் படுத்தி வந்தனர். இந்த தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கபடுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி செல்வது இந்த தொடருக்கு பின்னர் உறுதிப்பட்டு விடும். சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று விதமான் வடிவங்களிலும் இந்திய அணி தனது ஆதிக்கத்தி தொடர்ந்து நிரூபித்து வருகிறது. ஐம்பது ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டிக்கான ஐசிசி தர வரிசையில் முதல் இடத்தில் இருந்து வருகிறது இந்தியா.
அதே போல இருபது ஓவர் உலகக் கோப்பையை வென்ற வந்தாலும், இருபது ஓவர் போட்டி ஐசிசி தர வரிசையிலும் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.
டெஸ்ட் போட்டிகளுக்கான தர வரிசையில் இந்திய அணி இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது.
சர்வதேச டெஸ்ட் சாம்யன்ஷிப் இறுதிப் போட்டிக்காக அறிவிக்கப்பட்டுள்ள தேதி வரை இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் இந்த இரண்டு அணிகள் தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்த சுவாரஸ்யமான நிலையில் தான் இந்தியா -நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் போட்டி தொடர் நடக்கயிருக்கிறது.
இன்று காலை துவங்க வேண்டிய முதல் டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.இன்று காலை பன்னிரெண்டு பத்து மணியின் படி ஆட்டம் துவங்கிய பாடு இல்லை. போட்டியின் நடுவர்களாக மைக்கேல் காஃப், பால் ரைபிளும், மூன்றாவது நடுவராக ரிச்சர்ட் இல்லிங்வர்தும் செயல் படுகின்றனர்.
மழை நின்றது போட்டி நடத்தும் சூழல் இருக்குமா? என்பதனை நடுவர்கள் ஆய்வு மேற்கொள்வர். ஆட்டம் நடைபெற் ஏதுவான சூழல் இருக்குமேயானால் அவர்களது அறிவிப்பின் படி முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று துவங்க வாய்ப்பு ஏற்படும்.