Connect with us

Cricket

அப்போ கங்குலிக்கு டோனியை தெரியாது.. நான் சொல்லித்தான் அது நடந்தது.. முன்னாள் இந்திய வீரர் அதிரடி!

Published

on

Dhoni-Ganguly-Featured-Img

எம்.எஸ். டோனி தி அன்டோல்டு ஸ்டோரி திரைப்படம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் நீங்கா இடம்பிடித்து இருக்கும் மகேந்திர சிங் டோனியின் வாழ்க்கை வரலாற்றை கதையம்சமாக கொண்டிருக்கிறது. எனினும், இந்த படத்தில் எம்.எஸ். டோனி பற்றி நாம் அறிந்திராத தகவல்கள் அனைத்தும் இடம்பெறவில்லை. மாறாக பல்வேறு சுவார்ஸ்ய தகவல்கள் திரைப்படத்தில் இடம்பெறவில்லை.

அந்த வகையில் திரைப்படத்தில் இடம்பெறாத சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை பி.சி.சி.ஐ. தேர்வு குழுவில் இடம்பெற்று இருந்த முன்னாள் நிர்வாகி தெரிவித்து இருக்கிறார். கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக கிரிக்கெட் விளையாடி வருபவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ். டோனி பெருமையை எடுத்துக் கூறும் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.

Dhoni-Ganguly

Dhoni-Ganguly

அவ்வாறான சம்பவம் ஒன்றை இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டர் சையத் சாபா கரீம் தெரிவித்து இருக்கிறார். ரஞ்சி கோப்பைக்கான பீகார் அணி தேர்வாளராக பொறுப்பு ஏற்ற பிறகு, எம்.எஸ். டோனியை முதல் முறை பார்த்ததும் அவரின் திறமையை புரிந்து கொண்டதாக சையத் சாபா கரீம் தெரிவித்துள்ளார்.

பெரிய ஷாட்களை அடிப்பதற்கு டோனியிடம் எப்போதும் திறன் இருக்கும், ஆனால் அவரின் கீப்பிங்கில் மட்டுமே சிறிதளவு பயிற்சி தேவைப்பட்டது என கரீம் தெரிவித்து இருக்கிறார். எம்.எஸ். டோனியை முதல் பார்த்ததும், ஏற்பட்ட நினைவுகளை பகிர்ந்து கொண்டு சையத் கரீம் கூறியதாவது..,

 

“நான் அப்போது தான் எம்.எஸ். டோனியை முதல் முறையாக பார்க்கிறேன். ரஞ்சி கோப்பை தொடரில் அது அவருக்கு இரண்டாவது ஆண்டு. அவர் பீகார் அணிக்காக விளையாடுவார். அவர் பேட்டிங் மற்றும் கீப்பிங் செய்வதை பார்த்தேன். அவர் அப்போது எப்படி விளையாடினார் என்று இன்றும் என நினைவில் தெளிவாக உள்ளது. நாம் பின்னாளில் அவரிடம் சந்தித்த புத்திசாலித்தனத்தை முன்கூட்டியே புரிந்து கொண்டேன்.”

Syed-Saba-Karim-and-Ganguly

Syed-Saba-Karim-and-Ganguly

“ஸ்பின்னர் அல்லது பேஸ் பவுலர்களின் பந்துகளையும் பெரிய லோஃப்டெட் ஷாட்களை டோனி அடிப்பார். விக்கெட் கீப்பிங்கில், ஃபூட்வொர்க் மிகவும் திறம்பட செயலாற்ற வேண்டும். அந்த சமயத்தில் அவரிடம் அது சற்று குறைவாகவே இருந்தது. அப்போது, இந்த விஷயத்தில் முன்னேற்றம் அடைய அவருடன் பணியாற்றினோம். எம்.எஸ். டோனியின் மிகப்பெரும் திறமை, அப்போது நாங்கள் அவருக்கு கூறிய விஷயங்களை அவர் இன்றும் நினைவில் வைத்திருக்கிறார். எங்களுடன் பேசும் போது அவர் அதனை அப்படியே எங்களிடம் கூறுவார். அது எம்.எஸ். டோனியின் வாழ்க்கையில் திருப்பு முனையாக இருந்துள்ளது.”

“அந்த சமயத்தில் நான் கொல்கத்தாவில் இருந்தேன், சவுரவ் கங்குலி அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். நான் அவரை பார்க்க சென்றிருந்தேன், அப்போது இந்திய அணியில் சேர்க்கப்பட வேண்டிய விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டர் பற்றி எடுத்துரைத்தேன். துர்திர்ஷ்டவசமாக கங்குலி அப்போது எம்.எஸ். டோனி எப்படி விளையாடுவார் என்று பார்த்திருக்கவில்லை. மேலும் எம்.எஸ். டோனி பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் சேர்க்கப்படவும் இல்லை. அதன் பிறகு தான் அவர் அணியில் சேர்க்கப்பட்டார்,” என்று தெரிவித்தார்.

google news