Connect with us

Cricket

இப்படியா செய்வீங்க? ஹர்மன்பிரீத் கவுரை கிழித்த முன்னாள் கேப்டன்..!

Published

on

Harmanpreet-Kaur-Featured-Img

வங்கதேசத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. டி20 தொடரில் 2-1 என்ற அடிப்படையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 1-1 என்ற அடிப்படையில் சமன் செய்தது.

ஒருநாள் தொடரின் கடைசி போட்டி இந்திய அணி கேப்டனுக்கு பல்வேறு சர்ச்சைகளை, அவரது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக மாற்றி இருக்கிறது. அவுட் ஆனதும், கோபத்தில் ஸ்டம்புகளை பேட்-ஆல் அடித்தது, அம்பயர்களை கடுமையாக சாடியது, போட்டிக்கு பிந்தய போட்டோஷூட்டின் போது வங்கதேச கேப்டனிடம் அம்பயர்களையும் போட்டோ எடுக்க அழைத்து வரச் சொன்னது என ஹர்மன்பிரீத் கவுர் செயல்பாடுகள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

Diana-Edulji-1

Diana-Edulji-1

சமூக வலைதளங்களில் ஹர்மன்பிரீத் கவுர் செய்தது சரி என்று ஒருதருப்பும், தவறு என்று மறு தரப்பும் மாறி மாறி கருத்துக்களை பரிமாறி வருகிறது. இவரது செயல்பாடுகள் பற்றியும், என்ன தண்டனை வழங்கப்படும் என்பது பற்றியும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

ஹர்மன்பிரீத் கவுர் செயல்பாடுகள் ஐ.சி.சி. நடத்தை விதிகளின் லெவல் 2-ஐ மீறி இருப்பதாகவும், இவ்வாறு செயல்பட்ட முதல் பெண் கிரிக்கெட் வீரர் ஹர்மன்பிரீத் கவுர் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் காரணமாக ஹர்மன்பிரீத் கவுர் இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இவரது செயல்பாடுகள் குறித்து முன்னாள் இந்திய மகளிர் அணி கேப்டன் டியானா எடுல்ஜி கூறியதாவது..,

“இந்திய கேப்டனின் செயல்பாடுகள் ஏற்கத்தக்க ஒன்றாக இல்லை. அவர் நடந்து கொண்ட விதம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. நீங்கள் தான் கேப்டன். நீங்கள் தான் அணியை வழிநடத்தி சென்று, அடுத்து வர இருக்கும் ஜூனியர்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும். அவர்கள் உங்களின் நடத்தையை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களும் இதே போன்ற செயல்பட வாய்ப்புகள் உண்டு.”

Diana-Edulji

Diana-Edulji

“உடனுக்குடன் கோபம் அடைவது ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் ஐ.சி.சி. விதிகளின் கீழ் விளையாடி வருகின்றீர்கள். அதிர்ஷ்டவசமாக அது சீரிசின் கடைசி போட்டியாக அமைந்தது. பி.சி.சி.ஐ. இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் நல்ல வருவாய் பெறுகின்றீர்கள். முதலில் 90 முதல் 100 சதவீதம் வரை போட்டிக்கு பங்களிப்பை கொடுங்கள். போட்டிகளில் வெற்றி பெற்றாலே, அளவுக்கு அதிகமாகவே நட்சத்திர அந்தஸ்து தானாக கிடைத்து விடும்.”

“எல்லோரும் வெற்றி பெற வேண்டும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன், ஆனால் அம்பயரிங் போட்டியின் ஒருபங்கு மட்டும் தான். சில சமயங்களில் அது சாதகமாக இருக்கும், சமயங்களில் அது அப்படி இருக்காது. ஆனால், அதனை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருப்பது அவசியம் ஆகும். விரைவில் ஆசிய போட்டிகள் துவங்க இருக்கின்றன. அங்கு இலங்கை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதிகம் ஸ்கோர் செய்யாத பட்சத்தில் கடினமான சூழலை சந்திக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.

முன்னதாக 1983 உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று இருந்த மதன் லால் கூறும் போது, “வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக ஹர்மன்பிரீத் கவுர் நடந்து கொண்ட விதம் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. அவர் விளையாட்டை விட பெரிய நபர் இல்லை. அவர் இந்திய கிரிக்கெட்-க்கு அவப்பெயரை பெற்றுக் கொடுத்திருக்கிறார். பி.சி.சி.ஐ. அவர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *