Connect with us

latest news

இப்பெல்லாம் நாய் கூட பட்டம் வாங்குது… பட்டப்படிப்பு திராவிட இயக்கம் போட்ட பிச்சை.. ஆர் எஸ் பாரதி பேச்சால் சர்ச்சை..!

Published

on

தற்போதெல்லாம் நாய் கூட பிஏ பட்டம் வாங்குகிறது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவரும் தமிழகத்தின் முதல்வருமான மு க ஸ்டாலின் வலியுறுத்தி வருகின்றார். மேலும் சட்டசபையில் கடந்த 28ஆம் தேதி நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக மாணவர் அணி சார்பில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆர் எஸ் பாரதி மற்றும் மாணவரணி செயலாளர் சி வி எம் பி எழிலரசன் ஆகியோர் பங்கேற்று இருந்தார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு போராட்டத்தில் பேசிய ஆர் எஸ் பாரதி தெரிவித்திருந்ததாவது:” எல்லோரும் பட்டம் பெறுவதை தடுப்பதற்காக தான் நீட் போன்ற நுழைவு தேர்வு வந்துள்ளது.

சாதிவாரி இடஒதுக்கீட்டால்தான் எங்களின் பலர் டாக்டர் ஆகினர். குலம், கோத்திரம் போன்ற  பெருமையால் டாக்டராகவில்லை. எங்கள் பட்டப்படிப்புகள், டாக்டர் பட்டங்கள் திராவிட இயக்கம் போட்ட பிச்சை. நான் படித்த போது பிஏ படித்தாலே வீட்டுக்கு வெளியில் போர்ட் வைத்துக் கொள்வார்கள். ஆனால் தற்போதெல்லாம் நாய் கூட பட்டம் வாங்குகின்றது. மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் தைரியம் எனக்கு இருக்கின்றது என்று கூறியிருந்தார்.

அதில் நாய் கூட பட்டம் பெறுகிறது என்று அவர் கூறியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. பின்னர் இது குறித்து ஆர்எஸ் பாரதி விளக்கம் அளித்தார். அதாவது நாய் கூட பட்டம் பெறுகிறது என்பதை உள்நோக்கத்துடன் கூறவில்லை. கல்வி அனைவருக்குமானதாக மாறிவிட்டது என்ற அர்த்தத்தில் தான் அதைக் கூறினேன் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

google news