Connect with us

latest news

தடை செய்யப்பட்ட நாய்… 11 வயது சிறுவனை கடித்த சம்பவம்… சென்னையில் மற்றுமொரு அதிர்ச்சி…

Published

on

தற்போதைய சூழலில் நாய் வளர்ப்பவர்கள் தொடர்ச்சியாக அதிகரித்து இருக்கின்றனர். அதே சமயத்தில் சில நேரங்களில் அந்த நாய்கள் பிறரை கடித்துவிடுவதும் தொடர்கதையாக மாறி இருக்கிறது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் சிறுமியை ராட்வைலர் நாய் கடித்தது மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

இதனை தொடர்ந்து கால்நடை பராமரிப்பு துறையின் வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்தவர்களின் குழுவின் பரிந்துரையின் பேரில் சுமார் 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பில்லாத நாய் இனங்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டது.

ஜாப்னிஸ் தோசா, அகிதா மேஸ்டிப், ராட்வீலர்ஸ், பிட்புல் டெரியர் தோசா இனு அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர், டெரியர் ரொடீசியன், ரிட்ஜ்பேக் உல்ப், டாக் கேனரியோ, அக்பாஸ் டாக், மாஸ்கோ கார்ட் டாக், கேன்கார்சோ பேண்டாக் உள்ளிட்ட முக்கிய நாய் வகையில் அதில் அடக்கம்.

இந்த நாய்களை வளர்ப்பது ஆபத்தை விளைவிக்கும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த தடையை மீறி சென்னையை சேர்ந்த மாங்காடு பகுதியில்  கொழுமணிவாக்கம் சார்லஸ் தெருவில் ராட்வைலர் நாயை உரிமையாளர் வாக்கிங் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அந்த நாய் வீட்டு வாசலில் இருந்த 11 வயது துஜேஷை என்ற சிறுவனை கடித்து இருக்கிறது.

இதை தொடர்ந்து சிறுவனை அங்கிருப்பவர்கள் மீட்டு படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்த்து இருக்கின்றனர். நாயின் உரிமையாளர் நீலா மற்றும் கார்த்திக் மீது மாங்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்து இருக்கின்றனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *