latest news
இனி அரசு நிலத்தில் மரம் வெட்டினால் சிறைத்தண்டனை… விதியை கடுமையாக்கி வனத்துறை!
அரசுக்கு சொந்தமான நிலங்களில் வளர்க்கப்படும் மரங்களை வெட்டினால் இனி சிறை தண்டனை தான் விதிகளை கடுமையாக்கியது வனத்துறை.
பசுமை தமிழகம் என அமைப்பை உருவாக்கி தமிழகத்தின் பசுமை பரப்பை பாதுகாப்பாக காப்பாற்ற வேண்டும் என்ற முடிவுடன் தமிழக அரசு செயல் பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் மரம் நடும் பணிகளும் நடந்து கொண்டிருக்கிறது. அரசு மற்றும் தனியார் இடங்களில் நடப்படும் மரக்கன்றுகள் குறித்து ஆன்லைன் முறையில் துல்லியமான விவரங்களை தினமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் ஏற்கனவே இருக்கும் மரங்களை பாதுகாப்பாக காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் சில ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறதாம். அந்த வகையில் மரக்கன்றுகளை வெட்டுவதை தடுக்க கடுமையான விதிகளை முடிவு செய்து இருப்பதாக வனத்துறை தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அரசு நிலங்களில் இருக்கும் மரங்களை சிலர் வெட்டி எடுத்துச் செல்வது வழக்கமாக மாறி இருக்கிறது. இதை தடுக்க கடுமையான விதிகளை மேற்கொள்வதே சரி என்ற முடிவை எடுக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து விதிகளை மாற்றி சிறை தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்க புதிய சட்டத்திற்கான வரைவு தயார் செய்யப்பட்டு வருகிறது. இது விரைவில் அமலுக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக வனத்துறை சார்பில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது.