Connect with us

govt update news

பென்ஷன் வாங்குபவர்களுக்கு புதிய வசதி… இனி எல்லாமே வீடு தேடி வரும்…!

Published

on

பிஎஃப் ஓய்வூதியதாரர்களுக்கு தபால் மூலமாக டிஜிட்டல் உயிர் வாழ்வு சான்றிதழ் வீடு தேடி வந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறுவதற்கு வருடாந்திர ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். இந்த சிரமங்களை தவிர்க்கும் விதமாக ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம் அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வாங்கி ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே கைவிரல் ரேகையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

இதற்கு சேவை கட்டணமாக ரூபாய் 70 தபால்காரர்களிடம் நீங்கள் செலுத்தினால் போதுமானது. தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எ,ண் மொபைல் எண், பிபிஓஎன் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகையை பதிவு செய்தால் ஒரு சில நிமிடங்களில் உங்களுக்கு டிஜிட்டல் உயிர் வாழ்வு சான்றிதழை பெற்று கொள்ளலாம்.

இந்த ஆண்டில் இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்திய போஸ்ட் பேமென்ட் வங்கி மூலமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் உயிர் வாழ்வு சான்றிதழை தபால்காரர்கள் மூலம் சமர்ப்பித்திருக்கிறார்கள். சென்னை மண்டலத்தில் இருக்கும் 2194 அஞ்சல் அலுவலகங்களில் பணிபுரியும் 4,100 தபால்காரர்கள் மூலம் இந்த சேவையை பெற்றிருக்கிறார்கள்.

2014 ஆம் ஆண்டு அரசாங்கம் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை அறிமுகம் செய்தது. அதாவது அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மற்றும் இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட்மேன்ட் வங்கி தபால்காரர் மூலம் விழிப்புணர்வை வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த டிஜிட்டல் உயிர்வாழ்வு சான்றிதழ் சேவையை பெறுவதற்கு ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள தபால் நிலையம் அல்லது தங்கள் பகுதி தபால்காரனை தொடர்பு கொள்ளலாம். மேலும் https://ccc.cept.gov.in/ServiceRequest/request.aspx என்ற இணையதள முகவரி மூலம் அல்லது “Postinfo” என்ற செயலியை பதிவிறக்கம் செய்தும் இந்த கோரிக்கையை நிறைவு செய்யலாம்.

இந்த சேவையை வழங்க அனைத்து அஞ்சலகங்களிலும் நவம்பர் 1ம் தேதி முதல் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. எனவே ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரர்களிடம் உயிர்வாழ்வு சான்றுகளை சமர்ப்பித்து பயன் பெறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *