Connect with us

latest news

டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை!. அதனாலதான் கள்ளச்சாராயம்!.. துரைமுருகன் அடடே விளக்கம்..

Published

on

durai

கடந்த வாரம் கள்ளக்குறிச்சி கர்ணாபுரம் பகுதியில் வசிக்கும் மக்களில் பலரும் கடந்த வாரம் கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனார்கள். விசாரணையில் ஆந்திராவிலிருந்து கெட்டுப்போன மெத்தனாலை வாங்கி கள்ளசாரயத்தில் கலந்து விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுவரை கர்ணாபுரம் பகுதியை சேர்ந்த 64 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்கள். இறந்தவர்களுகு 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. ஒருபக்கம், தமிழகம் முழுவதும் கள்ளச்சாரயம் காய்ச்சி விற்பவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டிருக்கிறார்கள்.

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கல்வராயன் மலையில்தான் அதிக கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக செய்திகள் வந்ததால் மலைப்பகுதியிலும் போலீசார் தேடுதல் வேட்டையை துவங்கி இருக்கிறார்கள். சில இடங்களில் பேரல் கணக்கில் சாராயம் பிடிப்பட்டது. அவை கீழே ஊற்றி அழிக்கப்பட்டது.

ஒருபக்கம், இந்த விவகாரத்தை எதிர்கட்சியான அதிமுக கையில் எடுத்திருக்கிறது. கடந்த சில நாட்களாகவே சட்டபையில் அமளியில் ஈடுபட்டு அதிமுக எம்.ல்.ஏக்கள் சஸ்பெண்டும் ஆனார்கள். இந்நிலையில், இன்று சட்டசபையில் பேசிய திமுக எம்.ல்.ஏவும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் ‘டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை. அதாவது அதிக போதை இல்லை. அதனால்தான் கள்ளச்சாராயத்தை குடிக்கிறார்கள். உழைப்பவர்களுக்கு அசதியை போக்க மது தேவைப்படுகிறது. அரசு விற்கும் மதுபானம் அவர்களுக்கு சாஃப்ட் டிரின்க் போல இருக்கிறது. கள்ளச்சாராயத்தை தடுக்க தெருவுக்கு தெரு போலீஸ் ஸ்டேசன் திறக்க முடியாது. கிக் வேண்டும் என்பதற்காகவே சிலர் கள்ளச்சாராயம் குடிக்கிறார்கள்’ என பேசி இருக்கிறார்.

google news