latest news
ஒரு மட்டன் பிரியாணிக்கு இவ்வளவோ இகோவா? தம்பியால் அண்ணன் எடுத்த திடீர் முடிவு…
பெரும்பாலும் வெஜ் பிரியர்களுக்கு யாரும் அசைவ உணவை சாப்பிடுவதை பார்த்தால் கோபம் வரும். ஆனால் அந்த கோபத்தால் மோசமான முடிவை எடுத்து இருக்கிறார் தாம்பரத்தினை சேர்ந்த 11வது படிக்கும் மாணவர் ஒருவர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தாம்பரத்தை சேர்ந்தவர் பாபு. இவர் குவைத்தில் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சந்தியா மற்றும் இரண்டு மகன்கள் சென்னையில் வசித்து வருகின்றனர். இத்தம்பதிகளின் முதல் மகன் தாரிஸ். 16 வயதாகும் இவர் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
தாரிஸ் ஒரு சைவ விரும்பி. அசைவம் சாப்பிடுவர்களையே அவருக்கு பிடிக்காதாம். இதனால் வீட்டில் அசைவ உணவுகள் செய்யப்படுவதே இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பதினேழாம் தேதி பக்ரீத் பண்டிகையை ஒட்டி அருகில் இருந்த முஸ்லீம் நண்பர்கள் தாரிஸ் வீட்டிற்கும் மட்டன் பிரியாணியை கொடுத்து இருக்கின்றனர்.
அந்த மட்டன் பிரியாணியை தாரிஸின் தம்பி கோகுல் வீட்டில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கிறார். இதை பார்த்து கடுப்பானவர் வெளியில் எடுத்துப் போடக் கூறியும் கோகுல் கேட்காததால் கோபத்தில் தன்னுடைய ரூமிற்கு சென்று கதவை அடைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
மாலை வேளையில் ரூமிற்குள் சென்றவர் இரவு வரை வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த தாயார் ரூமை தட்டி இருக்கிறார். தாரிஸிடம் இருந்து எந்த சத்தமும் வராததால் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்து இருக்கின்றனர். அப்போது தாரிஸ் தூக்கில் தொங்கி இருப்பது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
இதைத்தொடர்ந்து தாரிஸின் உடலை மீட்ட குடும்பத்தினர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி இருக்கின்றனர். இது அங்கு இருப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
இதையும் படிங்க: பிறக்கும் போதே இவ்வளோ அதிர்ஷ்டமா? பேருந்து நிலையில் பிறந்த பெண் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்…