india
பதக்க பட்டியலை பதம் பார்க்குமா இந்திய அணி?…வீரர்களின் வாழ்வில் ஒளியேற்றுமா ஒலிம்பிக் போட்டிகள்?..
சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் துவங்க உள்ளன. உலகில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சார்ந்த வீரர்கள் இந்த போட்டி தொடரில் பங்கேற்று தங்களது திறமைகளை காட்டி வருகின்றனர். நான்கு ஆண்டிற்கு ஒரு முறை இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. தனி நபர் மற்றும் குழுப் போட்டிகளாக நடத்தப்பட்டு வரும் விளையாட்டுகளில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கும், அணிகளுக்கும் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் என பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இது வரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின் பதக்க பட்டியலில் அமெரிக்கா இரண்டாயிரத்து ஆறனூற்றி இருபத்தி ஒன்பது பதக்கங்களை (2629) வென்று உலக நாடுகளின் வரிசையில் ஆதிக்கம் செலுத்தி முதல் இடத்தை பிடித்துள்ளது. சோவியத் யூனியனாக இருந்த ரஷ்யா ஆயிரத்து பத்து பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இப்போதைய இங்கிலாந்தும் அப்போதைய பிரிட்டன் தொல்லாயிரத்து பதினாறு பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
இது வரை நடந்துள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி பெரிதாக சோபிக்கவில்லை. 1900ம் ஆண்டு நடந்த போட்டியில் தான் இந்தியா தனது கணக்கை துவங்கியது. பாரீஸில் நடைபெற்ற இந்த தொடரில் இரண்டு வெள்ளிப்பதக்கங்களை கைப்பற்றியது. அதுதான் அந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி பதக்கங்களின் எண்ணிக்கையாகும்.
2020ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்து முடிந்த ஒலிம்பிக் தொடரில் முறையே ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் என மொத்தமாக ஏழு பதக்கங்களை வாங்கியுள்ளதே இந்திய அணியின் தனிப்பட்ட பதக்க பட்டியலின் சாதனையாக இருந்து வருகிறது இதுவரை இந்தியா பங்கேற்ற பத்தொன்பது ஒலிம்பிக் தொடர்களில் மொத்தமாக சேர்த்து முப்பத்தி ஐந்து பதக்கங்களை பெற்றிருக்கிறது.
இதில் பத்து தங்கம், ஒன்பது வெள்ளி, பதினாறு வெண்கல பதக்கங்கள் அடங்கும். விரைவில் துவங்கவிருக்கும் இந்தாண்டிற்கான ஒலிம்பிக் தொடரில் பங்கற்கும் இந்திய அணி வீரர்கள் பதக்க வேட்டையில் இறங்கி நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்கின்ற பிரார்த்தனைகள் இப்போதே துவங்கி உள்ளது. இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்து வந்தது.
வீரர்களை பாராட்டி, உற்சாகப்படுத்தும் விதமாக பிசிசிஐ நூற்றி இருபத்தி ஐந்து கோடி ரூபாயை பரிசுத்தொகையாக அறிவித்தது. உலக அரங்கில் இந்தியாவை ஜொலிக்க வைக்கும் விளையாட்டு வீரர்களை பரிசுத்தொகைகள், வேலை வாய்ப்பு, மக்கள் மன்றங்களில் பதவி என கொடுத்து அழகு பார்க்க தயங்கியது குறைவே இந்தியாவை ஆண்ட அரசியல் கட்சிகளின் ஆட்சி வரலாற்றில்.