latest news
அசோக் நகர் பள்ளி விவகாரம்…மாற்றுத்திறனாளிகள் ஆணையம் நோட்டீஸ்…
சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா திரும்பிய நிலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்தே சைதாப்பேட்டை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அரசுப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டதை ஏற்க முடியாது, இது குறித்த விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சொல்லியிருந்தார்.
மாற்றுத்திறன் படைத்த ஆசிரியர் சங்கரை தரக்குறைவாக பேசியதாக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர். பல்வேறு புகார்களில் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மாற்றுத்திறனாளி ஆசிரியர் அவமதிக்கபட்ட விவகாரம் தொடர்பாக சைதாப் பேட்டை காவல் நிலைய ஆய்வாளர், அசோக் நகர் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் வருகிற இருபத்தி ஐந்தாம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு மாற்றுத் திரனாளிக ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திரனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என மகாவிஷ்ணு பள்ளி நிகழ்ச்சியில் பேசியிருந்தார். நகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது மேடையில் வைத்தே மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் மகாவிஷ்ணுவின் இந்த பேச்சிற்கு தனது எதிர்ப்பினை தெரிவித்திருந்தார்.