Connect with us

india

பேன்சி நம்பர் பிளேட்… ரூ. 23 லட்சத்துக்கு ஏலம்… அப்படி என்ன நம்பர் அது…!

Published

on

மக்கள் தங்களது இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் நம்பரை எளிய முறையில் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பேன்சி நம்பர் பிளேட்டுகளை வாங்குகின்றார்கள். இந்த வகையிலான பேன்சி நம்பர் இலக்கங்கள் மற்றும் எழுத்துக்களின் வரிசைக்காக போட்டி போட்டுக் கொண்டு தேர்வு செய்யப்படுகின்றது.

அதுமட்டுமில்லாமல் ஒரு சிலர் தங்களின் பிறந்த தேதி அல்லது தங்களுக்கு பிடித்தவர்களின் பிறந்த தேதி அல்லது மறக்க முடியாத ஒரு நாளாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த எண்ணில் தான் நம்பர் வேண்டும் என்று ஆசைப்படுவது வழக்கம். தனிப்பட்ட விருப்பத்தேர்வுகள் அதிர்ஷ்ட எண்கள் ஆகியோரின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றது.

இதற்கிடையே வாகனங்களுக்கான பேன்சி நம்பர்களை பெறுவதற்கு டெல்லி போக்குவரத்து துறை ஆன்லைன் மூலமாக ஏலம் நடத்தி வருகின்றது. இந்நிலையில் டெல்லி போக்குவரத்து துறை கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை நடத்திய ஏலத்தில் பல பேன்சி நம்பர்களுக்கு போட்டி போட்டுக் கொண்டு ஏலம் எடுத்திருந்தார்கள். அதிலும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் விரும்பும் 0001 என்ற பேன்சி எண்ணுக்கு மார்ச் மாதம் நடந்த ஏலத்தில் 5 லட்சம் ரூபாய் ஆரம்ப விலையாக நிர்ணயிக்கப்பட்டது.

இறுதியில் 23.4 லட்சத்துக்கு ஏலம் போய் இருக்கின்றது. அடுத்தபடியாக 0009 என்ற எண் பதிவு ஜூன் மாதத்தில் 11 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. அதைத் தொடர்ந்து 0007 என்ற எண் ஜனவரி மாதத்தில் 10.8 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயிருக்கின்றது. பெரும்பாலும் இது போன்ற எண்களை அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், திரைப்பிரபலங்கள் ஏலத்தில் எடுப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *