latest news
பைக்கில் சென்ற போது பறந்த பணக்கட்டுகள்… இருந்தும் அசராமல் தைரியமாக பேசிய விவசாயி
நாமக்கலை சேர்ந்த, ராசிபுரம் அருகே உள்ள ராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி பழனி நாயக்கர். இவர் சந்தையில் தன்னுடைய மாட்டை விற்று அந்த பணத்தை வங்கியில் போடுவதற்காக ராசிபுரம் கிளம்பி இருக்கிறார்.
ராமநாயக்கன்பட்டி பேருந்து நிலையத்தில் நின்றவர் இளைஞர் ஒருவரிடம் லிப்ட் கேட்டு வண்டியில் ஏறி சென்று இருக்கிறார். கையில் பணத்தை வைத்துக் கொள்ளாமல் அந்தப் பையை வண்டியில் தொங்க விட்டதாக கூறப்படுகிறது.
கோனேரிப்பட்டி ஏரிக்கரை பகுதியை வண்டி தாண்டும்போது பணப்பை கிழிந்து உள்ளிருந்த 500 ரூபாய் பணத் தாள்கள் வெளியில் சிதறி கொண்டே வந்திருக்கிறது. இருந்தும் பழனி நாயக்கர் இதை கவனிக்காமல் வண்டியில் சென்று கொண்டிருந்திருக்கிறார். ஆனால் அங்கிருந்த மக்கள் அவ்வண்டியை வழிமறித்து விவசாயி உடைய பணத்தை சேகரித்து அவரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இருந்தும் விவசாயி தன்னுடைய பணத்தை எடுத்துக் கொடுத்தவர்களிடம் எதுவும் பணம் வேண்டும் என்றால் எடுத்துக் கொள்ளுங்கள் என கூறியதும் அங்கிருந்து அவர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. சந்தையில் தன்னுடைய நான்கு மாடுகளை விற்றவர். 2 லட்சம் பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக சென்று இருக்கிறார்.
அங்கிருப்பவர்கள் 18000 பணத்தை சேகரித்துக் கொடுத்ததாகவும், ஆனால் இன்னும் சில ஆயிரங்கள் பறந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இருந்தும் பழனி நாயக்கர் இருப்பது வரை போதும் போனதை பற்றி கவலைப்பட வேண்டாம் என அங்கு இருப்பவர்களிடம் கூறி இருக்கிறார். பின்னர் அங்கிருந்த இளைஞர்கள் பழனி நாயக்கரை அழைத்துக் கொண்டு ராசிபுரம் கனரா வங்கியில் விட்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கிறது.