india
திருமணத்திற்கு 51 ஆயிரம் நிதியுதவி!.. யார் விண்ணப்பிக்கலாம்?!.. வாங்க பார்ப்போம்!..
இந்தியாவில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஏழைகள், வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா, அயூஷ்மான் பாரத் யோஜனா போன்ற திட்டங்கள் ஏழைகளுக்கு பெரும் உதவியாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் என சில திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. உத்திரபிரதேச மாநிலத்தில் ஏழைகளுக்கு உதவும் வகையில் திருமணத்திற்காக ஒரு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
திருமண செலவை செய்ய முடியாமல் தவிக்கும் ஏழை குடும்பத்தினருக்கு ரூ.51 ஆயிரம் அரசால் கொடுக்கப்படுகிறது. முதலில் திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக 10 ஆயிரம் கொடுக்கப்பம். அதன்பின் திருமண அலங்காரத்திற்கு 6 ஆயிரம் கொடுக்கப்படும். மீதமுள்ள 35 ஆயிரம் மணமகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். அதாவது இந்த 51 ஆயிரம் உதவி மணமகளின் குடும்பத்திற்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தை பூர்வீகமாக கொண்டு ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் இந்த நிதியுதவி கேட்டு விண்ணப்பிக்கலாம். மேலும், பட்டியல் சாதி மற்ரும் ஓபிசி பிரிவினர் மட்டுமே இதற்காக விண்ணப்பிக்க முடியும். குறிப்பாக மணமகளின் வயது 18 ஆகவும், மணமகனின் வயது 21ஆகவும் இருக்க வேண்டும்.