india
விமான டிக்கெட் புக் பண்ண போறீங்களா..? அப்ப இந்த சான்ஸ மிஸ் பண்ணிடாதீங்க… ரொம்ப கம்மி…!
பண்டிகை சீசனை முன்னிட்டு விமான டிக்கெட்டுகளின் விலை 25 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் ஆஃபர் விலையில் விமான டிக்கெட் விலை புக் பண்ண முடியும்.
பண்டிகை காலம் வந்துவிட்டது. இந்த காலத்தில் அதிக டிமாண்ட் காரணமாக விமான டிக்கெட் கட்டணமானது குறைக்கப்பட்டிருக்கின்றது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் பல உள்நாட்டு விமானங்களில் கட்டணம் 20 முதல் 25 சதவீதம் குறைக்கப்பட்டு இருக்கின்றது. இதனை இக்சிகோ தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு விமானத்தில் பயணம் செய்வதற்கு இது ஒரு மகிழ்ச்சி செய்தியாக உள்ளது.
விமான டிக்கெட் விலை குறைந்ததற்கு எண்ணெய் விலை வீழ்ச்சி என கூறப்படுகின்றது. கடந்த ஆண்டை விட இந்த முறை கட்டண விலையில் நிறைய மாற்றம் நடந்துள்ளது. இத்தகைய சூழலில் விமானத்தில் பயணம் செய்ய விரும்புவர்கள் மலிவான டிக்கெட் சராசரியாக 25 சதவீதம் வரை குறைந்துள்ளது. கடந்த வருடம் அதாவது 2023 ஆம் ஆண்டில் பண்டிகை காலம் நவம்பர் 10 முதல் 16ஆம் தேதி வரை இருந்தது.
இந்த ஆண்டு பண்டிகை காலம் அக்டோபர் 28 முதல் நவம்பர் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு கொல்கத்தா விமான டிக்கெட்களின் விலை 38 சதவீதம் வரை குறைந்திருக்கின்றது. அதன்படி கடந்த ஆண்டு இந்த வழித்தடத்தில் விமான டிக்கெட் விலை 10, 195 இருந்தது. ஆனால் இந்த வருடம் 6,319 ரூபாயாக குறைந்து இருக்கின்றது. அதேபோல் சென்னை கொல்கத்தா விமான டிக்கெட் விலை 36 சதவீதம் குறைந்து இருக்கின்றது.
கடந்த ஆண்டு இதன் விலை 8,725 ரூபாயாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 5604 ரூபாயாக விற்பனையாகி வருகின்றது. அதேபோல் பல்வேறு பகுதிகளிலும் டிக்கெட்டின் விலை குறைக்கப்பட்டு இருக்கின்றது. கடந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி விமான கட்டங்கள் அதிகரித்து இருந்ததாக பலரும் குற்றம் சாட்டி வந்த நிலையில் கடந்த வாரத்தில் குறிப்பிட்ட சில வழித்தடங்களில் விமான கட்டணம் 20 முதல் 25 சதவீதம் வரை குறைந்திருக்கின்றது. இன்னும் சில வழி தடங்களில் விமான கட்டணம் உயர்ந்துள்ளது. அகமதாபாத் டெல்லி வழித்தடத்தில் டிக்கெட் விலை 6000 இலிருந்து 8000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.