latest news
18 கிலோ மெக்னீசியம் சிலிகேட், 56 கிலோ பழைய சிக்கன்… எடுக்க எடுக்க வந்துகிட்டே இருக்கே… ஷாக்கிங்கில் ஃபுட் டிபார்ட்மெண்ட்…!
பழைய எண்ணையை பயன்படுத்தி உணவு பொருட்களை தயார் செய்த கடைகளை மூடிய உணவு பாதுகாப்புத்துறை மறு உத்தரவு வரும் வரை கடையை திறக்க அனுமதி கிடையாது என்று எச்சரிக்கை.
தூத்துக்குடியில் ஒரு சில ஹோட்டல்கள் மற்றும் பானிபூரி கடைகளில் கெட்டுப்போன உணவுகளை பயன்படுத்தி வருவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி உத்தரவின் பெயரில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் மாரியப்பன் தலைமையில் தூத்துக்குடியில் இருக்கும் அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் ஒரு உணவகத்தில் பழைய உணவு எண்ணெயை தூய்மைப்படுத்தி பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. மேலும் கடையில் இருந்து 18 கிலோ மெக்னீசியன் சிலிகேட் சிந்தடிக் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலமாக ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எண்ணையை தூய்மைப்படுத்த இந்த பவுடரை பயன்படுத்துகிறார்கள். மேலும் 45 லிட்டர் பழைய உணவு எண்ணெயை உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அது மட்டும் இல்லாமல் 12 மணி நேரத்திற்கு முன்பு தயார் செய்யப்பட்டு பயன்படுத்தாமல் இருந்த 56 கிலோ சிக்கனும் பறிமுதல் செய்யப்பட்ட அழிக்கப்பட்டது . மேலும் அந்த கடையை மூடிய உணவு பாதுகாப்பு துறையினர் மறு உத்தரவு வரும் வரை கடையை திறப்பதற்கு அனுமதி கிடையாது என்று கூறியிருக்கிறார்கள். அதை தொடர்ந்து சாலையோரங்களில் உள்ள பாணி பூரி கடைகளிலும் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.