Connect with us

Cricket

இந்தியா கடந்த 10 வருஷமா தோத்துட்டே இருக்க இதுதான் காரணம்.. ஹர்பஜன் சிங் ..

Published

on

harbhajan-singh

2013 ஆம் ஆண்டில் இருந்தே, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் தொடர்களில் இந்தியா தோல்வியடைந்து வருவதற்கான காரணத்தை முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்து இருக்கிறார். 2013 முதலே இந்திய அணி இந்த தொடர்களில் அணியாக ஒன்றிணைந்து விளையாடவில்லை. இதுவே இந்திய அணி தோல்விக்கு முக்கிய காரணம் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி 2013 முதலே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்திய தொடர்களில் எட்டு நாக்-அவுட் (அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டு) போட்டிகளில் விளையாடி இருக்கிறது. எனினும், இவை ஒன்றில் கூட இந்திய அணி கோப்பை வென்றதில்லை.

Harbhajan-Singh

Harbhajan-Singh

சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2023 சர்வதேச டெஸ்ட் சாம்பியின்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதன் முதலில் நடத்தப்பட்ட 2021 ஆண்டிலும் கோப்பை வெல்ல இந்திய அணி தவறிவிட்டது.

தற்போது ஒரு நாள் போட்டிக்கான 2023 உலக கோப்பை தொடர் விரைவில் துவங்க இருக்கிறது. இந்த போட்டிகள் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இது குறித்து ஹர்பஜன் சிங் கூறியதாவது.,

Harbhajan-Singh

Harbhajan-Singh

“எனக்கு தெரியவில்லை, எங்களிடம் என்ன இருந்தது, அவர்களிடம் என்ன இருந்தது என்பது பற்றி சொல்வது எனக்கு மிகவும் கடினமான ஒன்று ஆகும். இந்திய அணிக்காக விளையாடும் ஒவ்வொரு வீரரும், அவர்கள் எந்த காலக்கட்டத்தில் விளையாடினாலும், அவர்களின் ஒரே நோக்கம் நாட்டிற்காக சிறப்பாக விளையாடி, வெற்றியை தேடிக் கொடுப்பதாகவே இருக்கும் என்று நான் நம்புகிறேன்,”

“2015 மற்றும் 2019 அரையிறுதி போட்டிகளில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம், ஆனாலும், ஐ.சி.சி. கோப்பை கிடைக்கவில்லை. கடினமான சூழலில் இருந்து விரைந்து எழுவதில் அதிக கவனம் செலுத்த தவறியதும் காரணமாக இருக்கலாம். மிகப்பெரிய தொடர்களை அணியாக ஒருங்கிணைந்து விளையாட வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

google news