Connect with us

Cricket

ஹர்திக் பான்டியா அவுட் சர்ச்சை.. இதுக்கு பேரு என்ன தெரியுமா? குமுறும் நெட்டிசன்கள்..!

Published

on

இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் ஹர்திக் பான்டியா அவுட் ஆன விதம் சமூக வலைதளங்களில் சர்ச்சையாகி இருக்கிறது. வெஸ்ட் இன்டீஸ் அணியின் யானிக் கரியா வீசிய பந்தை எதிர்கொண்ட இஷான் கிஷன், அதனை ஸ்டிரெயிட் டிரைவ் ஷாட் ஆக மாற்ற நினைத்தார்.

ஆனால் பந்து, பேட்டில் சரியாக படவில்லை. இதன் காரணமாக பந்து யானிக் கரியாவிடமே கேட்ச் ஆக மாறியது. யானிக் கரியா கேட்ச்-ஐ தவற விட பந்து மறுமுனையில் இருந்த ஸ்டெம்ப்-ஐ பதம் பார்த்தது. மறுமுனையில் ரன் எடுக்கும் முனைப்பில் கிரீஸ்-ஐ விட்டு வெளியே வந்த ஹர்திக் பான்டியா, உடனே சுதாரித்துக் கொண்டு மீண்டும் கிரீஸ்-க்குள் நுழைய முயற்சித்தார்.

ஹர்திக் பான்டியா கிரீஸ்-க்குள் முதலில் நுழைந்தாரா அல்லது பந்து முதலில் ஸ்டெம்ப்-ஐ தாக்கியதா என்ற குழப்பம் களத்தில் இருந்த நடுவருக்கு ஏற்பட்டது. இதனால் தீர்ப்பை மூன்றாம் நடுவருக்கு மாற்றினார். மூன்றாம் நடுவர் ஹர்திக் பான்டியா அவுட் என்று தீர்ப்பு வழங்கினார். போட்டி முடிந்த பிறகு, ஹர்திக் பான்டியா அவுட் ஆகும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

வீடியோவின் படி ஹர்திக் பான்டியா பேட் முதலில் கிரீஸ்-ஐ தொட்டு, பிறகு பேட் மேல் எழும்பி காற்றில் இருந்த போது பந்து ஸ்டெம்ப்-ஐ தட்டியது. அதன்படி பேட் காற்றில் இருந்த போது பந்து ஸ்டெம்ப்-ஐ தட்டியதால் மூன்றாம் நடுவர் அவுட் என்று தீர்ப்பு வழங்கியதாக தெரிகிறது.

இந்த சம்பம் குறித்து எரிச்சல் அடைந்த நெட்டிசன்கள், சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவை வைத்து, ஐ.சி.சி. சமீபத்தில் தான் ரன் அவுட் தொடர்பான வீதிகளை மாற்றி அமைத்தது என்று கூறி, திருத்தப்பட்ட விதியை பகிர்ந்து வருகின்றனர். அதன்படி, பேட்டர், கிரீஸ்-க்குள் முதலில் பேட்-ஐ வைத்து, பிறகு பேட் அல்லது அவரின் உடல் காற்றில் இருக்கும் போது, பந்து ஸ்டெம்ப்-ஐ தாக்கினால், அதற்கு பேட்டர் அவுட் என்று தீர்ப்பு வழங்கிட முடியாது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஹர்திக் பான்டியா அவுட் சர்ச்சை ஒருபக்கம் இருந்த போதிலும், இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் இஷான் கிஷன் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார்.

google news