Connect with us

Finance

இன்னுக்கு இருபது ரூபாய் ஹைக்…இஷ்டத்துக்கு ஆட்டம் போடும் தங்கம் விலை?…

Published

on

Gold

தங்கத்தின் தாக்கம் இந்தியா போன்ற நாடுகளில் அதிகமாக இருப்பதால், அதன் விலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த விஷயங்களும் உற்று நோக்கப்படுகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகமாக உள்ள கலாச்சாரம் இங்கு உள்ளதால், ஆபரணங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

விழாக்களில் பங்கேற்பவர்கள் நகைகளை அணிந்து செல்வதற்கு முக்கியத்துவத்தை வழங்கியும் வருகின்றார்கள். ஏழை எளியவர்கள், நடுத்தர வாசிகள், பணம் படைத்தவர்கள் என அதிகமானோரின் விருப்பத் தேர்வு தங்கமாகவும் இருந்து வருகிறது.

நேற்று இருந்த விலையில் இன்று தங்கம் இருக்குமா? என்பது கேள்விக்குறியாக இருக்கும் நிலை தான் தென்படுகிறது. ஒரே நாளில் அதிரடி உயர்வையும், அதன் பின்னர் விலையில் இறக்கத்தினையும் சந்தித்து வருகிறது தங்கம். நேற்று கிராம் ஒன்றிற்கு ஏழாயிரத்து நூற்றி நாற்பது (ரூ.7,140/-) ரூபாயாக்கு விற்கப்பட்டு வந்தது சென்னையில் ஒரு கிராம் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கம். இன்றும் விலை உயர்வே தலை தூக்கியுள்ளது.

நேற்றினை விட இன்று கிராமிற்கு ரூபாய் இருபது (ரூ.20/-) உயர்ந்துள்ளது. இதனால் இன்று சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஏழாயிரத்து நூற்றி அறுபது ரூபாயாக (ரூ.7,160/-) உள்ளது. இந்த விலை உயர்வு சவரன் ஒன்றின் விலையை நூற்றி அறுபது ரூபாய் அதிகமாக்கி ஐம்பத்தி ஏழாயிரத்து இருனூற்றி என்பது ரூபாயாக (ரூ.57,280/-) மாற்றியிருக்கிறது இன்று.

ஒரு சவரன் தங்கத்தின் விலை ஐம்பத்தி ஏழாயிரத்து நூற்றி இருபது ரூபாயாக (ரூ.57,120/-) விற்கப்பட்டு வந்த நிலையில்.

Silver

Silver

கடந்த இரண்டு நாட்களாக விலையில் உயர்வை சந்தித்து வரும் தங்கம் ஆபரணப்பிரியர்களுக்கு தலை வலியாக மாறி வருகிறது.

ஆனால் இந்த இம்சையை கடந்த சில நாட்களாக தரவில்லை வெள்ளி என தான் சொல்லியாக வேண்டும். நேற்று விற்கப்பட்ட அதே விலையில் தான் இன்றும் விற்கப்படுகிறது வெள்ளி. கிராம் ஒன்றின் விலை அதே நூற்றி மூன்று ரூபாயாக்கே மாற்றமின்றி இன்றும் விற்கப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஓரு லட்சத்து மூவாயிரம் ரூபாய்க்கு (ரூ.1,03,000/-) விற்கப்படுகிறது

 

google news