india
800 பேருக்கு எச்ஐவி பாதிப்பு… எல்லாருமே பள்ளி, கல்லூரி மாணவர்களாம்… வெளியான ஷாக்கிங் நியூஸ்…!
ஹரியானாவில் 800க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் நோய் எச்ஐவி. இந்த நோய் மிகவும் கொடிய மற்றும் வேகமாக பரவக்கூடியதாகும். உலகம் முழுவதும் இருக்கும் கொடிய நோய்களில் எச்ஐவி ஒன்று. இந்த நோய்க்கு தற்போது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையின் திரிபுரா மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு எச்ஐவி பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தம் 828 மாணவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். திரிபுராவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதை பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து திரிபுரா எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் அந்த மாநிலத்தில் உள்ள 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகளில் சோதனை செய்தது. அப்போது இந்த கல்வி நிலையங்களில், பள்ளிகளிலும் மாணவர்களிடையே நடத்தப்பட்ட சோதனையில் 828 மாணவர்களுக்கு எச்ஐவி தொற்று இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக திரிபுரா மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் மூத்த அதிகாரி தெரிவித்திருந்ததாவது” திரிபுரா மாநிலத்தில் மாணவர்களுக்கு பரிசோதனை செய்த போது எச்ஐவி பாசிட்டிவ் உள்ளது தெரிய வந்தது. 828 மாணவர்களையும் நாங்கள் மீட்டுள்ளோம். அதில் 572 மாணவர்கள் உயிருடன் உள்ளனர். 47 பேர் உயிரிழந்துள்ளனர் .பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் .
போதைப் பழக்கம் அதிக அளவில் இருந்திருக்கின்றது. ஒரு ஊசியை பலரும் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதனால்தான் தொற்று ஒருவரிலிருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவி இருக்கின்றது. மேலும் பாதிக்கப்படும் மாணவர்களின் பெற்றோர்கள் பலரும் அரசு பணியில் இருக்கின்றார்கள். தங்களின் பிள்ளைகள் கேட்கும் எந்த பொருளையும் இல்லை என்று சொல்லாமல் அவர்களுக்கு செல்லம் கொடுத்து தற்போது போதைக்கு இறையாக்கி இருக்கிறார்கள்.