Connect with us

latest news

ஊறுகாய் தராத ஹோட்டல் நிர்வாகம்… 35 ஆயிரம் அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்…

Published

on

பொதுவாகவே ஹோட்டலுக்கு சாப்பிட சென்றால் அவர்கள் மெனுவில் குறிப்பிட்டு பொருட்களை நாம் ஆர்டர் செய்தால் அதில் எதுவும் தவறவிடக்கூடாது என நினைப்போம். அதை நாம் சாப்பிட்டாலும் சாப்பிடவில்லை என்றாலும் நமக்கு உரிய இலையில் அது இருக்க வேண்டும் என்பது பலரின் எண்ணமாக இருக்கும்.

டிஜிட்டல் காலமான இன்று நிறைய வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். தாங்கள் ஆர்டர் செய்த பொருட்களில் எதுவும் தவறவிட்டால் உடனே அதை போட்டோவாக எடுத்து புகார் தெரிவித்து அதற்குரிய நிவாரணத்தை பெற்றுக் கொள்கின்றனர்.

இதுவே ஹோட்டல் போய் சென்று சாப்பிடும்போது அதில் சில தவறுகள் நடந்தால் அதற்குரிய நிவாரணம் கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் பதில். ஆனால் தன்னுடைய உரிமையை நீதிமன்றம் வரை சென்று ஒருவர் நிலைநாட்டியிருக்கும் சுவாரசிய சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

2022 ஆம் ஆண்டு விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருக்கும் பாலமுருகன் ஹோட்டலில் ஆரோக்கியசாமி என்பவர் 25 பார்சல் சாப்பாடு வாங்கி இருக்கிறார். அதை எடுத்துக் கொண்டு போய் வீட்டில் சோதித்துப் பார்த்தபோது அதில் ஊறுகாய் வைக்காமல் ஹோட்டல் நிர்வாகம் தவறவிட்டிருக்கிறது.

இதைத்தொடர்ந்து ஹோட்டல் நேரில் போய் கேட்டதற்கு அவர்கள் உரிய பதிலளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆரோக்கியசாமி தன்னுடைய பிரச்சனையை புகாராக நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ஹோட்டல் நிர்வாகம் சரியான பதில் அளிக்காததை அடுத்து ஆரோக்கியசாமிக்கு முப்பதாயிரம் ரூபாய் அபராதம் கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு வருடமாக நடைபெற்ற வழக்கிற்கான செலவாக 5 ஆயிரம் ரூபாயும், 25 பார்சல் சாப்பாட்டில் வைக்க வேண்டிய ஊறுகாய் விலையான 25 ரூபாய் என மொத்தம் சேர்த்து 35 ஆயிரத்து 25 ரூபாயை ஆரோக்கியசாமிக்கு கொடுக்க வேண்டும் எனக் கூறி ஹோட்டல் நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *